Categories: சினிமா

ரஹ்மான் தமிழ் சினிமாவில் செய்த மாற்றம் இதுதான்… இயக்குனர் ராஜீவ் மேனன் பகிர்ந்த கருத்து!

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

இளையராஜா தன்னுடைய இசையால் தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருந்த போது ரஹ்மான் தன்னுடைய இருபதுகளில் அறிமுகமானார். ஆனால் முதல் படத்திலேயே தான் யாரென்பதை நிரூபித்து தேசிய விருது வரை சென்றார். முதல் படத்திலேயே அவர் இசை இந்தியா முழுவதும் அவரைக் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் ஆக்கியது.

இந்நிலையில் ரஹ்மானை மணிரத்னத்திடம் அறிமுகம் செய்து வைத்தவரான இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ரஹ்மானின் சாதனைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் ரஹ்மானோடு பல விளம்பரங்களில் இணைந்து பணியாற்றினேன். அதில் பயன்படுத்திய சில இசைத் துணுக்குகளை அவர் ரோஜா படத்தில் கூட பயன்படுத்தினார்.

ரஹ்மான் தமிழ் சினிமாவில் செய்த சாதனை என்றால் அது அவரின் ஒலிகளின் தரம்தான். சிலக் கருவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் சில விஷயங்களை சாத்தியப்படுத்தவே முடியாது என்று அதற்கு முன்னர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை சாத்தியப்படுத்த முடியும் எனக் காட்டியவர் ரஹ்மான்தான்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பகிரங்க சவால்..! “40 வருஷத்துக்கு விஜய் தான் CM”..! தனுஷ் வந்தா விஜய் காலி-யா?… அமைச்சர் CTR நிர்மல்குமாரின் தெறிக்கவிடும் பேட்டி…!!

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. ஏற்கெனவே நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து…

7 minutes ago

பக்தி பெயரில் விபரீதம்..! நெஞ்சில் மண்பாண்டம்… 9 நாள் நவராத்திரி விரதம்… கடைசியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்…!!

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், நவராத்திரி வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கடுமையான சடங்கு…

18 minutes ago

“இஸ்ரேலின் கதை முடிந்தது?”… அணு ஆயுதப் புகையில் மூழ்கிய தலைநகரம்… உலகையே உலுக்கிய AI புகைப்படம்… நெதன்யாகுவின் பகீர் எச்சரிக்கை…!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், டெல் அவிவ் நகரின் மீது அணு குண்டு…

22 minutes ago

விடிய விடிய காத்திருப்பு… ரூ. 634 கோடி முறைகேடு விவகாரம்… கே.என். நேருவுக்கு ஆப்பா?… லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை… ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் சுமார் ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை…

30 minutes ago

புது ரூட்..! “இதை மட்டும் செய்யாதீங்க!”… ஆந்திராவில் நடந்த ரகசிய டீல்… உடைபட்ட உண்மை… விஜய்யை மாற்றிய சந்திரபாபு நாயுடு…!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையேயான அண்மைய சந்திப்பு அரசியல்…

39 minutes ago

“இனி பழைய கதை வேணாம் விஜய்!”… ஆட்சிக்கு வந்து 6 மாசம் ஆச்சு… மாற்றம் எங்கே?… நேரில் சென்று பேசிய பிரேமலதா… வெடித்த புதிய விவாதம்…!!

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் தவெகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்று…

46 minutes ago