#image_title
திவ்யா துரைசாமி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் செய்தி வாசிப்பாளராகவும் ஆங்கராகவும் தனது கேரியரை ஆரம்பித்தவர். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் திவ்யா துரைசாமி.
இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2021 ஆம் ஆண்டு மதில், 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே, 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய திரைப்படத்தில் நடித்து உள்ளார் திவ்யா துரைசாமி. சமீபத்தில் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி ஆன குக் வித் கோமாளி சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் திவ்யா துரைசாமி.
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் தயாரித்து எழுதி இயக்கிய வாழை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திவ்யா துரைசாமி. இந்தத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார் திவ்யா துரைசாமி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமி வாழை திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும் பட்ட கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், இந்த படத்துக்காக நாங்கள் நடிப்பையும் தாண்டி ரொம்பவே உழைச்சி இருக்கிறோம். மாரி செல்வராஜ் சார் சின்ன வயசுல கஷ்டப்பட்டதை எங்க மூலமா மக்களுக்கு சொல்ல நினைக்கிறாரு. அவர் மைண்ட்ல இருக்கறதை கண்ணு முன்னாடி நாங்க கொண்டு வரணும் அந்த அளவுக்கு நாங்க நடிக்கணும். அதனால எல்லாமே ரியலிஸ்டிக்கா இருக்கணும்னு கஷ்டப்பட்டோம். அந்த வாழைத்தார தலையில தூக்கவே முடியாது. அதை தலையில் கரெக்டா நேரா நிக்க வச்சு நடக்கிறதுக்காகவே நாங்க ரெண்டு மூணு நாள் பயிற்சி எடுத்துக்கிட்டோம். அது சாதாரண ஒரு தரையில் நடக்கிறதே கஷ்டம் அந்த வாழத்தார தலையில வச்சு அந்த சேரு சகதிமா இருக்கிற வயல்ல நடக்கிறதற்கு ரொம்ப கஷ்டப்பட்டோம்.
அந்த வயல்ல இருக்க அட்டைப்பூச்சினாலே எனக்கு ரொம்ப பயம் அலர்ஜி. அதுலயும் நான் நடந்து தான் நாங்க சூட்டிங்கை எல்லாமே முடிச்சோம். ஒவ்வொரு நாளும் அந்த வாழைத்தாரை தூக்கி ஷூட்டிங் முடிச்சுட்டு அந்த சேரும் சகதி அந்த மேக்கப் எல்லாம் ரிமூவ் பண்ணி குளிக்கிறதுக்கே ரொம்ப நேரமாகும். அப்போ எல்லாம் உயிரே போயிடும் போல அளவுக்கு உடம்பு கழுத்தெல்லாம் பயங்கரமா வலிக்கும். அதோட நைட் வந்து நாங்க குளிக்க கூட முடியாது. அப்படியே வந்து படுத்துருவோம் காலையில உயிரோட இருந்தா சூட்டிங் போகலாம் என்கிற லெவல்ல உடம்பு அந்த அளவுக்கு வீக் ஆயிடும். அது மட்டும் இல்லாம ஒவ்வொரு ஷார்ட்டுக்கும் டிரஸ் மாத்துறதுக்கு கூட நான் ஓபன் ஸ்பேஸ்ல தான் நான் டிரஸ் மாற்றி இருக்கிறேன்.
ஏன்னா கேரவன் எல்லாம் எங்கேயோ நிக்கும். நாங்க சூட்டிங் உள்ள வயலுக்குள்ள எங்கேயோ நடக்கும். அப்போ நாங்க கேரவனுக்கு வந்துட்டு போக முடியாது அப்படிங்கறனால அங்க ஊர்ல இருக்கிற லேடிஸ் நான்கு பேர் துணியை வச்சு மறைச்சு புடிச்சுக்குவாங்க. அப்படி தான் டிரஸ் எல்லாம் மாற்றி இருக்கோம். அப்படி தான் நாங்க இந்த படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்கோம். கலையரசன் சாரும் அவ்வளவு சூப்பரா நடிச்சு இருப்பாரு. இந்த கதாபாத்திரத்தில் அவரை தவிர வேற எந்த நடிகராலையும் நடிக்க முடியாது. அவ்ளோ அசால்டா நாலஞ்சு வாழைத்தாரை தலையில தூக்கிட்டு நடந்து வந்தாரு. அப்படி நான் இல்லை எல்லாருமே இந்த படத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு உழைச்சிருக்கோம் என்று கூறியுள்ளார் திவ்யா துரைசாமி.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…