#image_title
MS பாஸ்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். 1987 ஆம் ஆண்டு நாடக கலைஞராக இருந்து வந்த எம்எஸ் பாஸ்கர் திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 1990களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் எம் எஸ் பாஸ்கர்.
2004 ஆம் ஆண்டு எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்ற எம் எஸ் பாஸ்கர் சினிமா மட்டுமல்லாது பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். அப்போது 2000கள் காலகட்டத்தில் பிரபலமான தொடர்களான சின்ன பாப்பா பெரிய பாப்பா, அரசி, செல்வி போன்ற தொடர்களில் நடித்தார் எம் எஸ் பாஸ்கர். இவர் நடித்த பட்டாபி கதாபாத்திரம் மிகப் பிரபலம் அடைந்து இவரை பட்டாபி என்று மக்கள் அழைத்தனர்.
தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த எம் எஸ் பாஸ்கர் சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் பார்க்கிங் கீர்த்தி சுரேஷ் உடன் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார் எம்.எஸ். பாஸ்கர்.
எம்.எஸ். பாஸ்கர் அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரது மகன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆதித்யா பாஸ்கர். இவர் விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து பிரபலமானவர். சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் திரைப்படத்திலும் நடித்து பாராட்டுகளை பெற்றவர் ஆதித்யா பாஸ்கர். எம் எஸ் பாஸ்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர். இவர் சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
தற்போது எம் எஸ் பாஸ்கர் அவர்களின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் அவர்களுக்கு வளைகாப்பு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ஐஸ்வர்யா பாஸ்கர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…