தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தி மஹால் தெருவில் பூங்கொடி (50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் வளையல் கடை வைத்து தொழில் செய்து வருகின்றார். இவருடைய மூத்த மகள் மகாலட்சுமி (29) கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மகாலட்சுமி வெங்கடேஷ் தம்பதியினருக்கு 9 வயதில் நித்தீஷ் என்ற மகனும் ஐந்து வயதில் சாய் ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் எழுந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்து மகாலட்சுமி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தர்மபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமியின் தாய் வீட்டுக்கு அவருடைய கணவர் வெங்கடேஷ் சென்றுள்ளார். பிறகு கரூரில் தாய் வீட்டில் இருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு இன்று காலை மீண்டும் அரூர் வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் கணவன் மனைவியிடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டபோது வீட்டில் இருந்த மகாலட்சுமியின் 70 வயது பாட்டியான லட்சுமி அம்மாள் இருவரையும் சமாதானம் செய்தார்.
இதனைப் பார்த்த பாட்டி லட்சுமி அவரது மகள் பூங்கொடியை அழைத்து வர பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கணவன் மனைவி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் வெங்கடேஷ் வீட்டிலிருந்த கத்தியால் மகாலட்சுமியின் கழுத்து மற்றும் கையில் வெட்டியதில் படுகாயம் அடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அம்மா பூங்கொடி மற்றும் பாட்டி லட்சுமி வீட்டில் வந்து பார்த்தபோது மகாலட்சுமி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மகாலட்சுமி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மகாலட்சுமியை கொலை செய்த கணவரை தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…