‘நீங்களும் நானும் எப்டி காதலிக்க முடியும், வாய்ப்பே இல்ல’.. உச்ச நடிகை துணை இயக்குனரை காதலித்து கரம்பிடித்து எப்படி..? மனம்திறந்த தேவயானி..

By Sumathi on பிப்ரவரி 3, 2024

Spread the love

கடந்த 1990களில் தமிழில் மிக முக்கியமான நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. குடும்ப பாங்கான கேரக்டர் என்றால், முதலில் இயக்குநர்களின் சாய்ஸாக இருந்தவர் தேவயானிதான். பல முன்னணி நடிகர்களின் வெற்றிப்படங்களில் நடித்தார் தேவயானி.

குறிப்பாக தெனாலி, சூரியவம்சம், நீ வருவாய் என, மூவேந்தர், கும்மிப்பாட்டு, விண்ணுக்கும் மண்ணுக்கும், பிரண்ட்ஸ் என பல படங்களில் நடித்து டாப் லெவலில் இருந்தவர் தேவயானி. ஆனால் திடீரென இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டார்.

   

   

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தேவயானி மற்றும் ராஜகுமாரன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தேவயானி கூறியதாவது, முதலில் இவர் காதலை சொன்ன போது ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. பிறகு ஒருகட்டத்தில் அவரது காதலை, அன்பை, நல்ல மனசை புரிந்துக் கொண்டு காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் வீட்டில் அப்பா, அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை.

 

அப்போது யாருடைய ஆதரவும் எங்களுக்கு இல்லை. அதனால் பூஜையறையில் போய் சாமிகிட்ட வேண்டிகிட்டேன். நீதான் எனக்கு துணையாக, உதவியாக இருந்து எங்கள் கல்யாணத்தை நடத்தி வைக்கணுமுன்னு வேண்டிகிட்டேன். அப்படிதான் எங்கள் திருமணம் கடவுேளாட உதவியால்தான் நடந்தது, என்றார்.

ராஜகுமாரன் கூறுகையில், அப்போது புகழின் உச்சியில் தேவயானி இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என டாப் லெவல் ஸ்டார் நடிகர்களுடன் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட உச்சத்தில் இருப்பவரை திருமணம் செய்துக்கொள்பவர் எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அன்புக்காக அவர் என்னை ஏற்றுக்கொண்டார்.

இன்றும் அவர் என் மரியாதைக்குரியவராக தான் நான் பார்க்கிறேன். அதனால் மனைவியான பிறகும், அவரை மரியாதையாக அழைக்கிறேன். அவரை முதலில் எப்படி உயர்ந்த இடத்தில் வைத்து பார்த்தேனோ, அதே இடத்தில்தான் அவரை இப்போதும் பார்க்கிறேன், என்று கூறியிருக்கிறார் இயக்குநர் ராஜகுமாரன்.

author avatar
Sumathi