சபரிமலையில் இன்று காலை கணிசமாக குறைந்தது பக்தர்கள் கூட்டம் – 30 நிமிடங்களில் சுவாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்!

Spread the love

சபரிமலையில் கார்த்திகை மாதம் முதல் வாரத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்த நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்களில் அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்திற்கு சரியாக வருவதில்லை. பலர் தங்களது பயணத்தை நிறுத்தியதாலும், பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்த நேரத்தில் வராமல் காலதாமதமாக வருகிறார்கள்.

அவ்வாறு வரக்கூடிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்படி வரக்கூடிய பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் வராத பக்தர்கள் பலரும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் வரும் ரயில் தாமதமாவதாலும் பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போகிறது. இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் பக்தர்களை தேதி மற்றும் நேரத்தை பார்க்காமல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களின் ஏராளமானோர் சபரிமலைக்கு வரவில்லை. இதனால் நிலக்கல் பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இன்று காலை அதிகாலை 5 மணி நிலவரப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு 16,989 பக்தர்கள் மலையேறி சென்றனர். இதனால் சன்னிதானம் அருகே 18ம் படி ஏறுவதற்கு முன்புள்ள நடைபாதையில் 2 வரிசையில் மட்டுமே பக்தர்கள் காத்து நின்றனர். அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர். 18ம் படிகளில் வேகமாக ஏறி செல்லாமல் பொறுமையாக ஏறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Elango

Recent Posts

மகனுக்காக அரசியலை விற்ற வைகோ..! “அன்று திராவிட இயக்கத்தின் போர்வாள்…. இன்று விஜய் ரசிகர் மன்ற தளபதி….” மல்லை சத்யாவின் காட்டமான பேச்சு….!!

திராவிட வெற்றி கழக தலைவரும், மதிமுகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

12 minutes ago

பேச்சுவார்த்தை இல்லையா…? முதல்வர் விஜய் – த்ரிஷா உறவில் திடீர் விரிசல்… பின்னணி என்ன…? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராகத்…

20 minutes ago

“யாருக்கு ஆதரவு…?” சஸ்பென்ஸ் வைக்கும் ஜி.கே.வாசன்… இடைத்தேர்தலில் தமாகாவின் புதிய அரசியல் ஆட்டம்…!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பேச்சு அரசியல்…

31 minutes ago

நள்ளிரவில் பயங்கரம்…! அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம்…. அலறி துடித்த பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்றிரவு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே…

35 minutes ago

இடைத்தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…! இடதுசாரிகளுக்கு சீமான் ஆதரவு…? அனல் பறக்கும் அதிரடி பேச்சு…!!

தமிழக இடைத்தேர்தல் களம் சுடச்சுட சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு…

1 மணத்தியாலம் ago

“கடந்த முறை 44… இப்போது 43…” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவுக்கு பெரும் சிக்கல்… தேர்தல் களத்தில் வெடித்த பூகம்பம்…!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்…

1 மணத்தியாலம் ago