#image_title
இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித் ஆசை படத்தில் நடிக்கும் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஜே சூர்யா பாரதிராஜா, ஜி எம் குமார், வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அதன் பின்னர் வாலி படத்தை இயக்கி அஜித்துக்கு ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார். அந்த படம் அவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் முடிந்ததுமே விஜய்யை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படம் ஹிட்டானதால் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தார்.
அதன் பின்னர் நியூ படத்தின் மூலம் நடிகர் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவின் பரபரப்பான நடிகராக இருக்கிறார். இந்நிலையில் எஸ் ஜே சூர்யா பற்றி பேசிய இசையமைப்பாளர் தேவா “நான் குஷி படத்துக்காக ‘மேகம் கருக்குது’ பாட்டை மெட்டமைத்த போது இது மிகவும் சாதாரணமாக உள்ளது. அதனால் ஹிட்டாகாது என்றேன். ஆனால் எஸ் ஜே சூர்யா இந்த பாட்டு சூப்பரா ஹிட்டாகும்னு சொல்லி வாங்கிட்டு போனாரு. அத மாதிரியே ஹிட்டாச்சு. அது மாதிரி அவருக்கு ஹிட்டாகும் பாட்டு எதுன்னு கணிக்கிற திறமை இருந்துச்சு” எனக் கூறியுள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…