“IT வேலையை விட இதுவே மேல்!” இன்ஜினியர்களை ஓரம் கட்டிய டெலிவரி வருமானம்! பெங்களூரு இளைஞரின் வைரல் வீடியோ… குவியும் கமெண்ட்கள்…!!

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த ஜெப்டோ (Zepto) டெலிவரி ஊழியர் ஒருவர் தனது வாராந்திர வருமானம் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. @im____jamal என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், அந்த இளைஞர் தனது வார வருவாயின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு வாரத்திற்கு மட்டும் சுமார் 17,000 ரூபாய் சம்பாதிப்பதாகக் காட்டியது நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை சுமார் 9 லட்சம் பேர் பார்த்துள்ள நிலையில், கமெண்ட் பகுதியில் பலரும் நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “வாரத்திற்கு 17,000 ரூபாயா? பல மென்பொருள் பொறியாளர்கள் கூட இவ்வளவு சம்பாதிப்பதில்லை” என ஒரு பயனர் பதிவிட, மற்றொருவரோ “இன்ஜினியரிங் படிப்பை விட்டுவிட்டு இதற்கே வந்துவிடலாம் போலிருக்கிறதே, அங்கே ஏதேனும் வேலை காலியிடம் உள்ளதா?” என்று கிண்டலாகக் கேட்டுள்ளனர். பலருக்கு இந்த வருமானம் ஒரு கவர்ச்சிகரமான வேலை வாய்ப்பாகத் தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள எதார்த்தம் மிகவும் சவாலானது.

உண்மையில், இந்தியாவில் இது போன்ற டெலிவரி பணிகளில் ஈடுபடும் ‘கிக்’ (Gig) தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது. மிகக் குறுகிய காலத்திற்குள் பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்ற நிறுவனங்களின் நெருக்கடி, அவர்களைச் சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டத் தூண்டுகிறது. வெயில், மழை எனப் பாராமல் உழைக்க வேண்டிய சூழல், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயங்களுக்கு மத்தியில் இந்த வருமானம் ஈட்டப்படுகிறது. மேலும், இவர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு அல்லது பாதுகாப்பு வசதிகள் நிறுவனங்கள் தரப்பிலிருந்து போதுமானதாக வழங்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

Soundarya

Recent Posts

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

6 minutes ago

ஷாக்… தங்கத்துல உள்ளாடையா..?! மெகா ஊழல் சோதனையில் சிக்கிய பெண் எம்பி.. ரூ539 கோடி ரொக்கம்.. 27 கிலோ தங்கத்தை பார்த்து.. மிரண்டு போன அதிகாரிகள்…!!

ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…

17 minutes ago

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா?… ரூ.35 கோடி பேரம்… சிக்கிய திமுக புள்ளி… பின்னணியில் முன்னாள் அமைச்சர்?…!

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…

22 minutes ago

விஜய்யை வீழ்த்த திமுக – அதிமுக ரகசிய டீல்… எஸ்பி வேலுமணி கடிதத்தால் அம்பலமான உண்மை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…

23 minutes ago

குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…

33 minutes ago

“என் குரல் இல்லை… நிரூபிக்க ரெடி…” ஆடியோ சர்ச்சைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த மாஸ் சவால்…!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…

33 minutes ago