Categories: சினிமா

அந்த epic நகைச்சுவைக் காட்சி உருவாகக் காரணமே டெல்லி கணேஷ்தானா?… அஞ்சலி செலுத்திய பின் வடிவேலு பகிர்ந்த தகவல்!

Spread the love

நடிகர் டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். திருநெல்வேலியில் பிறந்த அவர் ஏர்போர்ஸ் வேலைக்காக டெல்லி சென்ற போது அங்குள்ள தமிழ் நாடகக் குழுக்களோடு பழக்கம் ஏற்பட்டு மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்படிதான் அவருக்கு சினிமாவுக்கான வழி பிறந்துள்ளது. அவரின் நடிப்பைப் பார்த்து கவரப்பட்ட பாலச்சந்தர், 1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் அவரைஅறிமுகப்படுத்தினார்.

#image_title

1981 ஆம் ஆண்டு ‘எங்கம்மா மகாராணி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் டெல்லி கணேஷ். பின்னர் துணை கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி திரைப்படம்தான். அதன் பின்னர் நகைச்சுவை, குணச்சித்திரம் என தனது நடிப்பால் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளார் டெல்லி கணேஷ்.

இந்நிலையில் நேற்று முந்தினம் அவர் உடல்நலக் குறைவால் தன்னுடைய 81 ஆவது வயதில் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய வடிவேலு பேசும்போது “நேசம் புதுசு படத்தில் வரும் அந்த பிரபலமான காமெடி, டெல்லி கணேஷ் அண்ணன் சொன்ன ஒரு சம்பவத்தால்தான் உருவானது. அவர் ஊருக்குப் போனபோது நடந்த சம்பவத்தை என்னிடம் சொன்னார். நான் அதைக் காட்சியாக வைக்கலாம் என்று முடிவு செய்து அதற்கு அவரிடம் அனுமதி பெற்று படத்தில் வைத்தோம். செல்லமாகக் கடிந்துகொண்டே அனுமதி தந்தார். அவர் அனுமதிக்கவில்லை என்றால் அந்த காட்சி வந்திருக்காது.

#image_title

அவரின் மறைவால் அவரது அன்பை இழந்து நிற்கிறேன். அவரோடு இணைந்து நடித்தபோது கொடுத்த அறிவுரைகளை எல்லாம் மறக்க முடியாது. நான் மதிக்கும் பல நடிகர்களில் அவரும் ஒருவர்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

51 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

54 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

1 மணத்தியாலம் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

2 மணத்தியாலங்கள் ago