சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவில் வசித்து வந்த ஜோதிகா என்ற 23 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருடைய கணவர் கோபால் (29) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோபாலுக்கு திருவொற்றியூர் மற்றும் சாத்தங்கோடு போலீஸ் நிலையங்களில் முன்னதாகவே பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி மற்றும் ஏழு வயது மகனுடன் மேட்டு தெருவுக்கு குடிபெயர்ந்துள்ளார். சம்பவத்தன்று இரவு கோபால் போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னுடைய மனைவி மயக்க நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் அவருடைய குற்றப் பின்னணி காரணமாக போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜோதிகா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவருடைய உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மருத்துவ அறிக்கையில் ஜோதிகாவின் தொண்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் இது தற்கொலை அல்லது கணவர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோபால் அடிக்கடி போதையில் மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…