காதல் திருமணம் செய்த மகள்… வீட்டிற்கு அழைத்து சென்று தந்தை செய்த ‘அந்த’ காரியம்… ஆந்திராவில் நள்ளிரவில் அரேங்கேறிய கொடூரம்..!!

Spread the love

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரசேனாவின் மகள் சவுதேஸ்வரி, தனது உறவினர் வீட்டுக்கு வந்த நாகராஜு என்பவரைக் காதலித்துள்ளார். இந்த காதலுக்கு தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சவுதேஸ்வரிக்கு ஒரு அரசுப் பள்ளி ஆசிரியருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால், காதலைக் கைவிடாத சவுதேஸ்வரி, வீட்டை விட்டு வெளியேறி நாகராஜுவைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாகக் காவல் நிலையத்தில் பொய்ப் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் சவுதேஸ்வரி திருடவில்லை என்பது உறுதியானது. இருப்பினும், “மகள் ஐந்து நாட்கள் வீட்டில் தங்கிவிட்டுப் போகட்டும்” என்று போலீசாரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு, சந்திரசேனா தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கடந்த மாதம் 19-ஆம் தேதி கணவர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையில், அதற்கு முதல் நாள் தனது மனைவி மற்றும் மகனைத் திட்டமிட்டு விவசாய நிலத்திற்கு அனுப்பி வைத்தார். வீட்டில் மகள் மட்டும் இருப்பதை உறுதி செய்துகொண்டு தனது கொடூரத் திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கினார்.

கடந்த மாதம் 18-ஆம் தேதி நள்ளிரவில், தனது உறவினர் பால சீனுவுடன் இணைந்து, தூங்கிக் கொண்டிருந்த சவுதேஸ்வரியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினார். தன்னை விட்டுவிடுமாறு தந்தை என்று கூடப் பாராமல் சவுதேஸ்வரி உயிருக்குப் போராடி கெஞ்சியுள்ளார். ஆனால், சாதி மற்றும் கௌரவம் கண்ணை மறைக்க, ஈவு இரக்கமின்றி மகளைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தனர். பின்னர், இது தற்கொலை போலத் தெரிவதற்காக மகளின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடினர்.

தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகராஜு அளித்த புகாரின் பேரில், சவுதேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மூச்சடைக்கச் செய்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. போலீசார் சந்திரசேனாவை பிடித்து விசாரணை நடத்தியதில், கௌரவத்திற்காக மகளைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சந்திரசேனா மற்றும் அவருக்கு உதவிய பால சீனு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Muthu Mani

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

7 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

7 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago