Categories: சினிமா

சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுடன் நடனமாடி… அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்… சூப்பர் அப்டேட் இதோ…

Spread the love

சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே முதலில் நியாபகம் வருவது அருள் சரவணன் தான். காரணம், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அடிக்கடி தோன்றி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தனது நிறுவனத்தின் விளம்பரத்தில் தானே நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் அருள் சரவணன்.

விளம்பரம் மூலம் மிகவும் பாப்புலரான சரவணன் இந்த பாப்புலர் பத்தாதே இன்னும் பாப்புலர் ஆகவேண்டும் என்றல் அதற்கு ஒரே வழி சினிமா தான் என்று நன்கு புரிந்துகொண்டார்.அந்த வகையில் இவர் தன்னுடைய விளம்பரங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜெண்ட் சரவணா திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் எதிர்பார்த்தை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான இப்படத்தில் சரவணன் விஞ்ஞானியாக களம் இறங்கினார் மேலும் ரோபோ சங்கர், தேவதர்ஷினி, காமெடி நடிகர் விவேக் போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சனமும் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இருப்பினும் வசூலில் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து அருள் சரவணன் அடுத்தடுத்து திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறியிருந்தார்.  தற்பொழுது அடுத்தப்படத்திற்காக கதைகளை கேட்டும் வருகிறார். இப்படியான நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய அருள் சரவணன், அவர்களுக்கு இனிப்புகள், ஆடைகள் வழங்கினார். தொடர்ந்து பேசிய அருள் சரவணன், “அனைவருக்கும் வணக்கம். எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளையும் வழங்கினார். அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் அவரிடம், ‘நீங்கள் நடிச்ச லெஜண்ட்ஸ் படம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.

அடுத்த படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க’ என சொல்கிறார். அதற்கு, ‘ஒரு நல்ல கதை அமைய வேண்டும் என்றுதான் இவ்வளவு நாளா வெயிட் பண்ணேன். இப்ப நல்ல கதை அமைஞ்சிருக்கு. எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ எடுத்துட்டு ரிலீஸ் பண்றேன்’ என அருள் சரவணன் கூறுகிறார். தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ‘ஹூக்கும்’ பாடலுக்கு குழந்தைகளுடன் டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.  இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“ஏசி-யில் தூங்கிவிட்டு காலையில் தலைவலியோடு எழுகிறீர்களா?… காரணம் இதுதான்.. இனிமேல் இதை மட்டும் செய்யாதீங்க”… அதிர வைக்கும் உண்மைகள்…!!!

தற்காலச் சூழலில் ஏசி (Air Conditioner) என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பிப்ரவரி மாதத்திலிருந்தே…

40 seconds ago

விஜய்க்கு விழுந்த பலத்த அடி… ஸ்டாலினுக்கு ‘டாட்டா’ காட்டிய பி.டி. செல்வகுமார்… அதிமுக வேட்பாளருக்காக களமிறங்கியது ஏன்..?

தமிழகத் திரையுலகில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகவும், 'புலி' படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பி.டி. செல்வகுமார். விஜய்யுடன் 'கோயமுத்தூர் மாப்பிள்ளை'…

50 seconds ago

குறைந்த செலவில் ஒரு பாதுகாப்பான வழி… கொசுக்கடியிலிருந்து தப்பிக்க செக்யூரிட்டி கார்டின் மாஸ்டர் பிளான்… வைரலாகும் ‘பிளாஸ்டிக் கவசம்’ வீடியோ..!!

கொசுக்களிடம் இருந்து தப்பிக்க ஒரு செக்யூரிட்டி கார்டு செய்த நூதனமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திறந்தவெளியில்…

2 minutes ago

“உங்க ஊருக்கே பவர் இல்ல.. இதுல காஷ்மீர் கேக்குதா?.. முதல்ல லைட்ட போடுங்கப்பா”… பாகிஸ்தானை விளாசும் இந்திய நெட்டிசன்கள்… ஈரான் போரால் வந்த விபரீதம்….!

ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து…

5 minutes ago

“ஒரே ஒரு ரூபாய்.. 50 வருஷ அரசியல்”… “லஞ்சம் வாங்கினேன்னு நிரூபிச்சா இங்கேயே செத்துருவேன்”… காட்பாடியில் கதறிய துரைமுருகன்…!

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…

9 minutes ago

அதிர்ஷ்ட கதவு திறந்தது!… உச்ச வீட்டில் சூரிய பகவான்… அடுத்த 30 நாட்களுக்கு இந்த 6 ராசிகளுக்கு பணமழை பொழியப்போகுது… உங்கள் ராசி இருக்கா?

சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…

11 minutes ago