அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இந்தோனேசியா அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த புயல் இந்தோனேசிய கடற்கரையை கடந்து வலுவிழந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு உள்ளது. இது மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்த புதுவை, சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் வங்க கடலில் டிட்வா புயல் உருவானது என்றும் தற்போது சென்னையிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழக மற்றும் தென்னாந்தரா பகுதிகளுக்கு இடையே நகர வாய்ப்பு உள்ளது. இதனால் வருகின்ற நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் செங்கல்பட்டு கடலோர மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை புயல் தாக்க வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…