குழந்தைகளின் செயல்கள் எப்போதுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றி, பார்ப்போரின் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கும். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சிக்கும் புன்னகைக்கும் பஞ்சமிருக்காது. அதற்குச் சான்றாக, தற்போது வீட்டில் வளர்க்கப்படும் கோழி ஒன்றிற்குச் சிறுமி ஒருவர் ஆசையாக ஷு அணிவித்து அழகு பார்க்கும் அழகான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகக் கோழிகள் ஒரே இடத்தில் அமைதியாக நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் இயல்புடையவை. ஆனால், இக்காணொளியில் சிறுமி தனது பிஞ்சுக்கரங்களால் ஷு அணிவிக்கும் வரை, அந்தச் கோழியும் எந்தவித இடையூறும் செய்யாமல் ஒரு சிலை போல அமைதியாக நின்று அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது.
https://www.instagram.com/reel/Da2iZE3CtFd/?utm_source=ig_web_button_share_sheet
ஒருவழியாகச் சிறுமி ஷுவை அணிவித்து முடித்ததும், அந்தச் கோழியும் மிகவும் கம்பீரமாக கேமராவிற்கு போஸ் கொடுக்கிறது. சிறுமியின் அன்பான சுட்டித்தனமும், கோழியின் இந்த அசத்தலான போஸும் சமூக வலைத்தளப் பயனாளர்களைப் பெரிதும் கவர்ந்து இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…
1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு…
திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக பரவி வரும் செய்திகள் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான வன்னி…
மைசூர் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…