Connect with us

CINEMA

அய்யயோ! மீண்டும்.. மீண்டுமா…? ஜாமீன் கேட்ட TTF வாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்…!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டி.டி.வி.வாசனை யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை ரூ.35 லட்சத்தை தாண்டியுள்ளது.

   

தற்பொழுது முதல் முறையாக TTF வாசன் கதையின் நாயகனாகவும், நடிகராகவும் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் களமிறங்க உள்ளார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக விபத்தில் சிக்கினார் TTF வாசன். அவர் விலை உயர்ந்த தனது மோட்டார் சைக்கிளில் மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற TTF வாசன் “வீலிங்” செய்ய முயன்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து சாலையோர தடுப்பின் மீது மோதி சுக்குநூறானது. இதனால் TTF வாசன் மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அவரது கையில் எலும்பு முடிவு ஏற்பட்டது. தற்போது நண்பர் அஜீஸ் வீட்டில் ஓய்வு எடுக்கும் TTF வாசனை காண ஏராளமான ரசிகர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். TTF வாசன் விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் TTF வாசன்.

இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாசனுக்கு கையில் வலி அதிகமானதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அவர் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் நீதிபதி, வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில், வாசன் தனக்கு ஜாமின் கோரி மீண்டு நீதிமன்ற கதவை தட்டி உள்ளார். இந்த முறையும் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவர் வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டது.

Continue Reading

More in CINEMA

To Top