Connect with us

CINEMA

விசித்ராவை ரூமுக்கு வரச்சொன்ன ஹீரோ.. பலியாடான நடிகர் விஜயகாந்த்..? இவர் மீது பழி போடுவது ஏன்..?

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, சிவகார்த்திகேயன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் இமான் சொன்னது, சமூக வலைதளங்களில் சூடு கிளப்பியது. அடுத்து திரிஷா குறித்து மன்சூர் அலிகான் தவறாக பேசியது அனல் பறந்தது. இப்போது சமூக வலைதளங்களில் பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகை விசித்ரா சொன்ன அந்த சம்பவம், எரிமலை குழம்பாய் கொதிக்கிறது என்றால் அது மிகையல்ல. கேரளா, மலம்புழாவில் நடந்த அந்த ஷூட்டிங்கில், நைட் என்னோட ரூமுக்கு வந்துடு என, விசித்ரராவுக்கு அதிரடி கட்டளையிட்டவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும், விசித்ராவை கன்னத்தில் அறைந்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ விஜய் என்றும், 2001ல் நடந்த அந்த சம்பவம், பலேவடிவி என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில்தான் நடந்தது என்றும் முடிவாக சொல்லப்படுகிறது.

 Actress Visitra

   

இதற்கிடையே ஓட்டலில் நடந்த சம்பவம் குறித்து, அன்று அந்த ஓட்டலில் ஜெனரல் மேனேஜராக இருந்த, அதன்பிறகு விசித்ராவின் கணவராக மாறிய சாஜி பேசியுள்ளார். அந்த நேர்காணலில், விசித்ரா சொன்ன அத்தனையும் உண்மை. இப்போதும் அந்த பிரபல நடிகர் குறித்து வெளியே பகிரங்கமாக சொன்னால் எனக்கும், என் மனைவிக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை என்பதால் சொல்லாமல் இருப்பதே எங்களுக்கு நல்லது என்றும் கூறியிருக்கிறார்.

 Actress Visitr

தெலுங்கு சினிமாவில் ரொம்ப டெரர் ஆளாக பாலகிருஷ்ணாவை கூறுகின்றனர். சினிமா செல்வாக்கு, ரசிகர்கள் ஆதரவு, அரசியல் பின்புலம் காரணமாக, அவரது இந்த தவறு குறித்து விசித்ரா சொன்ன புகாருக்கு யாருமே செவிசாய்க்கவில்லை. குறிப்பாக இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதே வேளையில் 2001ம் ஆண்டில் நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் காதுகளுக்கும் இந்த புகார் சென்றுள்ளது. விசித்ரா கூறிய புகாரை, விஜயகாந்த் கூட கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 Actress Visitra

ஒருவேளை, விஜயகாந்திடம் இந்த புகார் சென்றதா, அல்லது அப்போதைய சங்க செயலாளர் சரத்குமாரிடம் இந்த புகார் சென்றதா என்பதும் சந்தேகமாக உள்ளது. விஜயகாந்திடம் இந்த புகார் சென்றிருந்தால், யாராக இருந்தாலும் அவர் விசாரணை நடத்தாமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்க மாட்டார். அவர் யாருக்கும் பயப்படுகிற ரகம் அல்ல, என்பது தமிழக மக்களுக்கே தெரிந்த விஷயம். ஆனால், இப்போது விசித்ரா பிரச்னையில் கேப்டன் விஜய்காந்த் மீதும், அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top