நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி, தற்போது அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் நிலவும் கடுமையான உட்கட்சி பூசல் காரணமாகவே தாம் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீநிதி, இந்த பூசல்களால் தனது தொகுதியில் எந்தவொரு மக்கள் பணியையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொங்கு மண்டலத்திலிருந்து பெண் தலைவர்கள் யாரும் முன்னேறி வரக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் தீவிரமாக இருப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்து அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. ஜோதிமணியின் இந்த கருத்துக்கு ஸ்ரீநிதி எதிர்வினையாற்றியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி, ஸ்ரீநிதி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இத்தகைய உட்கட்சி மோதல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் கிரிபிரசாத்திடம் தோல்வியடைந்த ஸ்ரீநிதி, தற்போது காங்கிரஸை விட்டு விலகி திமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…
தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், தற்போது செயல்படாமல் இருக்கும் ஒரு…