“காலேஜுக்கே சரியா வரல, அட்டனன்ஸ் கம்மியா இருக்கு”… வீட்டுக்கு வா நான் பாத்துக்குறேன்… கல்லூரி மாணவியை தனியாக அழைத்து பேராசிரியர் செய்த கொடூரம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 20 வயது மாணவி ஒருவர் BCA இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அந்த கல்லூரியில் பேராசிரியராக சஞ்சீவ் குமார் மண்டல் (45) என்பவர் பணியாற்றி வந்த நிலையில் BCA பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். இதனிடையே மாணவி சரியாக கல்லூரிக்கு வராததால் அவருடைய வருகை பதிவு குறைவாக இருந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கும் தன் வீட்டில் சாப்பிட வரும்படியும் மாணவிக்கு சஞ்சீவ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சஞ்சீவ் குமார் வீட்டுக்கு மாணவி சென்றுள்ளார். ஆனால் அங்கு பேராசிரியர்யின் குடும்பத்தினர் யாரும் இல்லை. அவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனால் முதலில் வீட்டுக்குள் செல்ல மாணவி மறுத்த நிலையில் அவரை கட்டாயப்படுத்தி சஞ்சீவ் குமார் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பிறகு வருகை பதிவு மிகவும் குறைவாக உள்ளதாகவும் அந்த பிரச்சனையை தான் சரி செய்து கொடுப்பதாகவும் மாணவியிடம் கூறியுள்ளார். இதற்காக தான் சொல்லும்படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சமயத்தில் மாணவியை அவருடைய தோழி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். இதனால் தனக்கு அவசரமாக அழைப்பு வந்துள்ளதாகவும் உடனே தான் இங்கிருந்து புறப்பட வேண்டும் என்று கூறிவிட்டு மாணவி வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டார். பிறகு தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோர் மற்றும் சக மாணவிகளிடம் கூறிய நிலையில் உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேராசிரியரை கைது செய்த விசாரித்து வருகிறார்கள்

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

8 மணத்தியாலங்கள் ago