“இனி நாங்கதான் கிங்!”… தமிழ்நாடு பத்தாது, அடுத்த டார்கெட் கேரளா… எல்லையைத் தாண்டி CM விஜய் போடும் மெகா ஸ்கெட்ச்… ஷாக்கில் டெல்லி வட்டாரம்..!!!

Spread the love

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மற்றும் இயூமுலீ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக தனது பெரும்பான்மையை நிரூபித்து, மாநில அரசியலில் தனது அதிகாரப்பூர்வ இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது கட்சியைத் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக நடிகர் விஜய்யின் பலமாக இருந்த “விஜய் மக்கள் இயக்கம்” என்ற ரசிகர் அமைப்பு, தற்போது முழுமையான அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டு பிற மாநிலங்களிலும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, புதுச்சேரித் தேர்தலில் நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தவெக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், எதிர்க்கட்சித் வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது தவெக நிர்வாகிகளுக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

இதேபோல், அண்டை மாநிலமான கேரளாவிலும் தவெக தனது அரசியல் அடியை எடுத்து வைத்துள்ளது. திருச்சூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று, உறுப்பினர் சேர்க்கை முகாமைத் நடத்தியதோடு மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளனர். கேரளாவில் விஜய்க்கு இருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளத்தை அப்படியே அரசியல் வாக்கு வங்கியாக மாற்றுவதே இந்தத் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் முக்கிய நோக்கமாகும். மேலும், தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “தமிழகத்தில் திராவிட கட்சிகளின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்து ஆட்சியைப் பிடித்த தவெக, அதே வேகத்தில் தென் மாநிலங்களிலும் தனது அடையாளத்தை நிறுவ முயல்கிறது; இதற்கு விஜய்யின் பலமான ரசிகர் கட்டமைப்பு பெரும் பலமாக இருக்கும்” எனக் கருதுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெறப் பல மாநிலங்களில் வாக்கு சதவீதமும், வெற்றிகளும் தேவை என்பதால், தவெக இந்த நீண்டகால அரசியல் திட்டமிடலில் இறங்கியுள்ளது. சாதாரண ரசிகர் மன்றமாகத் தொடங்கி, இன்று தமிழகத்தின் ஆளுங்கட்சியாக உயர்ந்துள்ள இந்த அமைப்பு, தேசிய அளவில் விரிவடைய முயல்வது தென்னிந்திய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

7 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

7 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

7 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

7 மணத்தியாலங்கள் ago