உதயநிதிக்கு உதவிய ஐஏஎஸ் முருகானந்தம்?…. தூக்கி அடித்ததன் பின்னணியில் அதிர்ச்சி காரணம்…. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு….!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுற்ற கையோடு, 20-க்கும் மேற்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., நிர்வாக ரீதியாக பெரிதும் முக்கியத்துவமில்லாத டான்சி அமைப்பின் தலைவராக மாற்றப்பட்டது அரசியல் மற்றும் ஐ.ஏ.எஸ். வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசுடன் நெருக்கம் காட்டி வந்த அதிகாரிக்கு திடீரென நேர்ந்த இந்த “ஓரங்கட்டல்” நடவடிக்கைக்குப் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் பேசப்பட்டு வருகின்றன.

முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிராக எழுந்த புகாரின்பேரில், தஞ்சாவூரில் அவரை உடனடியாகக் கைது செய்ய மேலிடத்திலிருந்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அதிகாரத்தில் இருந்த மூத்த அதிகாரி முருகானந்தம், “கைது நடவடிக்கையின் போது மிகவும் கடுமையாகச் செயல்பட வேண்டாம் என்றும், நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு வரும் வரை கைதைத் தாமதப்படுத்துமாறும்” காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த விவகாரம் தகுந்த ஆதாரங்களுடன் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றதை തുടர்ந்தே, முருகானந்தம் உடனடியாக முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு டான்சிக்கு மாற்றப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொருபுறம், மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்ட-ஒழுங்குப் பிரச்சனைகள் ஆட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன. குறிப்பாக, சென்னையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் அளித்த மறுநாளே பிரதீப் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, லண்டன் பயணம் முடிந்து முதலமைச்சர் திரும்பியதும் காவல்துறை நிர்வாகத்தைச் சீரமைக்கும் வகையில் பல மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளைத் தூக்கியடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்ட சட்ட-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அன்பும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகத்திற்குத் தலைமைச் செயலாளர் சாய்குமாரின் வழிகாட்டுதல்கள் பயனுள்ளதாக இருக்கும் போதிலும், அவர் தேர்தல் நேரத்தில் பாஜகவால் நியமிக்கப்பட்டவர் என்ற விமர்சனம் வலுத்து வருகிறது. இதனால் அவரை முதலமைச்சரின் ஆலோசகராக நியமித்துவிட்டு, புதிய தலைமைச் செயலாளராகப் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ராஜேஷ் லக்கானி அல்லது மத்திய அரசுப் பணியில் இருக்கும் கிருஷ்ணன் ஆகியோரில் ஒருவரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிகாரத்துவ அதிரடி மாற்றங்கள் குறித்த இறுதி முடிவுகள் அனைத்தும் இன்னும் ஓரிரு வாரங்களில் தெரியவரும்.

Nanthini

Recent Posts

அடகொடுமையை..! சாலையில் போறீங்களா?… விதிகளை காற்றில் பறக்கவிடும் சரக்கு ரிக்‌ஷாக்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்…!!

டெல்லியின் ஜண்டேவாலன் ஈத்கா சாலை பகுதியில் இன்று காலை நிகழ்ந்த ஒரு விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.…

2 minutes ago

அண்ணன் மனைவியின் கழுத்தை பிடித்து இழுத்து வந்த கொழுந்தன்…. தலையை துண்டித்து கொன்ற மாமனார்… சொத்து தகராறில் கொடூரம்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

தெலங்கானா மாநிலத்தில் 1.5 ஏக்கர் நிலத் தகராறு காரணமாக, தெருவில் நடந்து சென்ற மருமகளை அவரது மாமனாரும் மைத்துனர்களும் சேர்ந்து…

17 minutes ago

காணாமல் போன தாய்… 3 நாட்களாக தேடிய மகன்… தைல மரக்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல் போன பெண் ஒருவர் தைல மரக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…

26 minutes ago

“மகள், பேரக்குழந்தை உட்பட 14 பேர்…” சொந்த குடும்பத்தையே துடிதுடிக்க கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரோனால்ட் ஜீன் சிம்மன்ஸின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக…

58 minutes ago

தலை மர்மம்!.. தூங்கிய குழந்தைக்கு இப்படியா?… மாயமான சிறுமி ஓடையில் சடலம்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்… பதறவைக்கும் பின்னணி…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள டாஹுவா கிராமத்தில், பெற்றோருக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி நள்ளிரவில் மர்ம…

1 மணத்தியாலம் ago

“சொன்னதை செஞ்சா வேலை நடக்கும்…” ரூ.1 1/4 லட்சத்துக்கு பேரம்… பெண் வி.ஏ.ஓ-வை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நிலப் பட்டா மாறுதலுக்காக ரூ.1 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக…

1 மணத்தியாலம் ago