“யானையின் கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்…” மூச்சு திணறி, உணவருந்த முடியாமல் தவிப்பு…. இணையத்தில் தீயாகப் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

Spread the love

அஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமலிகர் பகுதி அருகே சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்றின் கழுத்தில், ராட்சத டிராக்டர் டயர் ஒன்று மிகவும் இறுக்கமாக மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் அந்த யானை உணவருந்த முடியாமலும் மூச்சுத் திணறியும் உயிருக்குப் போராடி வந்துள்ளது.

இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கசிரங்கா வனவிலங்கு மறுவாழ்வு மையம் மற்றும் கோலாகாட் வனத்துறை அதிகாரிகள் இணைந்து களத்தில் இறங்கி, அந்த யானைக்குப் மயக்க ஊசி செலுத்தி, கழுத்தில் இறுக்கமாக இருந்த டிராக்டர் டயரை அறுத்தெடுத்து அகற்றி அதிரடியாக மீட்டனர்.

மனிதர்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “அஸ்ஸாமில் மனிதராக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி, யாரும் துயரத்தில் இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, யானை மீட்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து மீட்புக் குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

நண்பர்களிடையே திடீர் மோதல்… அடித்து கொல்லப்பட்ட வாலிபர்… சரக்கு பார்ட்டியில் வெடித்த மோதல்… கொலையாளியை வளைத்து பிடித்த போலீஸ்…!!

குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…

21 seconds ago

பக்தர்கள் ஷாக்…. தங்க ரிஷப வாகனத்தின் மீது செருப்போடு ஏறிய தீயணைப்பு வீரர்கள்…. திருவண்ணாமலை கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் 9 கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர்…

50 seconds ago

நாசாவின் திட்டம் படுதோல்வி…. சரியாக 7:39 மணி…. விண்ணிலிருந்து விழுந்த 1,500 கிலோ எடையுள்ள எமன்கூண்டு…. கோடிக்கணக்கான மக்கள் உயிர் தப்பிய அதிர்ச்சி பின்னணி….!

கடந்த 2004-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் புகழ்பெற்ற 'ஸ்விப்ட் அப்சர்வேட்டர்' (Swift Observatory) செயற்கைக்கோள், தனது 22 ஆண்டுகால…

7 minutes ago

“வா நேர்ல பாக்கலாம்”… ரூ.26,000 காபி பில்… அழகிய பெண்ணை நம்பிப் போன இளைஞர்… தப்பியோடிய மாயப்பெண்… கஃபேவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லியில் பிரபல டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவரால் இளைஞர் ஒருவர் மிரட்டப்பட்டு பெருந்தொகை பறிக்கப்பட்ட மோசடிச் சம்பவம்…

10 minutes ago

“அதிகாலை 6 மணிக்கு தியேட்டரா…?” வாழ்க்கை என்ன படமா…? உங்க மாற்றம் இதுதானா… முதல்வர் விஜய்க்கு சீமான் கிடுக்கிப்பிடி கேள்வி…!!

புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள…

15 minutes ago

“என் புள்ள உசுரோடதான் இருக்கா”…. கதறும் தாய்…. உளவுத்துறையை களமிறக்கிய விஜய்.. உள்ளே புகுந்த OCIU, SBCID…. செஞ்சி சிறுமி வழக்கில் அதிரடித் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…

16 minutes ago