“இதுதான் உங்க கடைசி வார்னிங்”… தவெக எம்.எல்.ஏ.க்களை நேரில் அழைத்து லெஃப்ட் & ரைட் வாங்கிய முதலமைச்சர் விஜய்…. வெளியான பகீர் தகவல்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் (எம்.எல்.ஏ.) நாளை அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதற்காக தவெகவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சென்னைக்கு விரைந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பல்வேறு சர்ச்சைகளிலும், குற்றச் வழக்குகளிலும் சிக்கி வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை நேரில் சந்தித்து கண்டித்து எச்சரிக்கை செய்வதற்காகவே இந்த முக்கியமான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அவசரக் கூட்டத்திற்கான பின்னணி குறித்து ஆராய்கையில், தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் முதலமைச்சர் விஜய்யை அவரது ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், வெங்கட் ராமன், அருண்ராஜ் மற்றும் விஜய்யின் தனிச்செயலர் ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவந்த எதிர்மறைச் செய்திகள் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர்களான ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்கள் குறித்தும் விஜய் தீவிரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவாதத்தின் போது, தவெக எம்.எல்.ஏ.க்கள் சிலர் திமுக மற்றும் அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகளின் வலையில் விழுந்திருப்பதாக உளவுத்துறை அளித்த அறிக்கையை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், துணைச் சபாநாயகர் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட ஆபாசச் செய்திகள் போன்ற தொடர் சர்ச்சைகள் அரசுக்கும் கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாக ஆலோசகர்களும் அமைச்சர்களும் கவலை தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, இத்தகைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எம்.எல்.ஏ.க்களை நேரில் அழைத்து முதலமைச்சர் எச்சரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையேற்று நடத்தப்படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “எதிர்க்கட்சிகளின் ஆசைகளுக்குப் பலியாகிவிடக் கூடாது; அரசு அதிகாரத்தை கையில் எடுத்து ஆட்சிக்கும் கட்சிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது” எனத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சணியமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இறுதிக்கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்படவுள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக தவெக மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து எச்சரிப்பதற்கான தனிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய புஸ்சி ஆனந்திற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! கதவை திறந்தது தான் தப்பா?… புகாரளித்தும் அடங்காத ஆக்ரோஷம்… பழிவாங்க துடித்த கும்பல்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…

1 minute ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன மனுஷி… கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற தாய்… பெங்களூருவை உலுக்கிய திக் திக் சம்பவம்…!!

பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…

2 minutes ago

“காசு தர்றியா, சாவடிச்சிடவா?!”… அடுத்தடுத்து விழுந்த அடிகள்… துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்… கோயிலில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…

16 minutes ago

டேய்… வண்டிய நிறுத்துடா… அலறியும் நிறுத்தாமல் போலீசை 200 மீட்டர் இழுத்துச் சென்ற… போலி நம்பர் பிளேட் கார்… நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்…!

மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார்…

21 minutes ago

சாகசம் இப்படியா முடியும்?… 56 மீட்டர் உயர கிரேன்… வானில் பறந்தபோது நேர்ந்த விபரீதம்… மின்கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ரஷ்ய வீரர்…!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு…

23 minutes ago

ஐயோ… கடவுளே… வீட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் நடந்த கொடூரம்… மயக்க மருந்து கொடுத்து விற்கப்பட்ட 15 வயது சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

பாகல்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் ஏற்பட்ட கோபத்தில் வயல்வெளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் 34 வயது நபருக்கு…

29 minutes ago