உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டத்திலுள்ள பர்சா குர்த் கிராமத்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் 11,000 வோல்ட் மின்சாரக் கம்பத்தில் ஏறி கம்பிகளுக்கு நடுவே படுத்து உறங்கிய வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீன் தயாள் என்ற அந்த நபர், அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு போதையின் உச்சத்தில் மின்கம்பத்தின் உச்சிக்குச் சென்றுள்ளார். அவர் அங்கு சென்றதோடு நிறுத்தாமல், ஏதோ தன் வீட்டுப் படுக்கையில் தூங்குவது போல அதிஉயர் அழுத்த மின்சாரக் கம்பிகளின் மீது சாதாரணமாகப் படுத்துக்கொண்டார். இதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, சம்பவ இடத்திற்குக் கீழே பெருமளவில் கூடத் தொடங்கினர்.
அந்த நபர் மின்கம்பத்தில் ஏறிய சில நிமிடங்களுக்கு முன்புதான், ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் நூலிழப்பில் உயிர் தப்பினார்; ஒருவேளை கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருந்தால், அந்த நொடியே அவரது உயிர் போயிருக்கும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். உடனே காவல்துறை மற்றும் மின்சார வாரியத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதி முழுவதற்கும் மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டது. காவல்துறையினரும் மின் ஊழியர்களும் நீண்ட நேரம் போராடி, அந்த நபரிடம் கீழே இறங்கி வருமாறு கெஞ்சிக் கூத்தாடி, ஒருவழியாகப் பல மணி நேர முயற்சிக்குப் பிறகு அவரைப் பத்திரமாக மீட்டனர்.
இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆபத்தான முறையில் மின்கம்பியில் படுத்திருந்த இந்த நபரைக் நெட்டிசன்கள் பலரும் “குடிபோதை ஸ்பைடர்மேன்” என்று கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், “மரணத்தின் விளிம்பிற்குச் சென்று தொட்டுவிட்டுத் திரும்பியுள்ளார்” என்றும், “இவருக்கு ஆயுசு மிகவும் கெட்டி” என்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் மக்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…