வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சின்மயி தொடர்ந்து இணையவழித் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில், அவரது கணவர் ராகுல் ரவீந்திரன் ‘தாலி’ குறித்த கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் எதிரான கொலை மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பாடகி சின்மயி தனது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டு வெளியிட்ட வீடியோவில், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் AI ஆபாசப் படங்களின் ஆபத்துகள் குறித்துக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதில், “இன்று ஒரு பக்கத்தில் இருந்து எனக்கு மார்பிங் செய்யப்பட்ட படம் கிடைத்தது, அதைக் காவல்துறைக்கு டேக் செய்தேன். சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது பிரச்சனையே அல்ல. நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளேன். கடந்த சில வாரங்களாக எனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. பெண்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்குப் பயப்படவோ அல்லது வெட்கப்படவோ கூடாது என்றும், இது பெண்களின் தவறு அல்ல, மாறாகப் பொதுவெளியில் இருந்து பெண்களை வெளியேற்ற ஆண்கள் மேற்கொள்ளும் முயற்சி. பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பலருக்கும் உள்ளது. அப்படி அடங்கிப் போகாத பெண்கள் இறந்து போக வேண்டும் என நினைக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், வெட்கப்படாமல் உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…