குடும்பத் தலைவிகளே ரெடியா?… தமிழகம் முழுவதும் நாளை அனைவருக்கும் வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட தயாராகி வருகின்றது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை தொடர்பான வாக்குறுதி தான் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு கை கொடுத்தது. எனவே 2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், கூடுதல் பயனாளிகளை இணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக பலரும் புதிதாக விண்ணப்பித்து வந்த நிலையில் சுமார் 29 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 29 லட்சம் விண்ணப்பங்களில் 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதனிடையே சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் டிசம்பர் 12 நாளை காலை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவர் தொடங்கி வைத்தவுடன் விடுபட்ட தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். ஒருவேளை மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால் உடனே கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

“மன உளைச்சலா இருக்கு” தூக்கமே வர மாட்டேங்குது… விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத கர்ப்பிணி பெண்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…

2 minutes ago

“அந்த ஒரு பதிவு” தவெக கூட்டணியை உறுதி செய்தது விசிக…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி…

14 minutes ago

BIG BREAKING: விஜய் பதவியேற்பு..? இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகப்போகும் முடிவு… பரபரப்பில் தமிழகம்..!!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின்…

18 minutes ago

சம்பளத்தை விட மனநிம்மதியே முக்கியம்..! சாப்ட்வேர் வேலையைத் துறந்து காலணி வியாபாரத்தில் சாதிக்கும் ஷிஃப்னாஸ் ஷெரீப்…!

பெங்களூரைச் சேர்ந்த ஷிஃப்னாஸ் ஷெரீப் என்ற பெண், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கிய கார்ப்பரேட் வேலையைத் துறந்து,…

24 minutes ago

காங்கிரஸை கழட்டி விட்டால்.. “5 வருடம் சிக்கலில்லாத ஆட்சி” விஜய்க்கு தூது விட்ட பாஜக.. நடக்கபோவது என்ன..??

கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால், விஜய் 5 ஆண்டுகளுக்குச் சிக்கலின்றி ஆட்சி அமைக்க உதவுவதாகப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

24 minutes ago

“தவெக ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை” அந்தர் பல்டி அடித்த அமமுக MLA… விஜய் தலையில் விழுந்த பேரிடி..!!

"தவெக-விற்கு வழங்கப்பட்ட ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை" என்று அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.…

30 minutes ago