Connect with us

CINEMA

நெப்போட்டிசம் இங்கையும் இருக்கு ; விஜய் சேதுபதி மகன் நடிப்பது என்ன ? இதனால் பல வாய்ப்பை இழந்தேன் …. பசங்க பட நடிகர் ஆவேசம்

ஹிந்தி சினிமாவில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்த பிறகு நெப்போட்டிசம் என்ற வார்த்தை படு வைரல் ஆனது. அதாவது ஏற்கனவே சினிமாவில் அம்மா, அப்பா, தெரிந்தவர்கள் இருப்பார்கள் அவர்கள் மூலமாக எந்த வித கஷடமும் இன்றி சினிமாவுக்கு வருவார்கள். அதுதான் நெப்போட்டிசம். இது நம் தென்னிந்திய சினிமாவில் சற்று குறைவு தான்.

Alia bhatt about nepotism

   

ஆலியா பட் கூட ஒரு பேட்டியில், நான் கதை கேட்டேன் எனக்கு பிடித்திருந்தது ஆனால் ஏற்கனவே வேற ஹீரோயின் புக் ஆகிவிட்டார் எனக்கு அது பிடிக்கவில்லை அடம்பிடித்து அந்த வாய்ப்பை பெற்றேன் என கூறினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, எந்த வித பின்புலமும் இல்லாமல் வருபவர்கள் வாய்ப்பை தட்டி பறிக்கிறார்கள் என பலர் ஆவேசப்பட்டனர்.

child actor nishesh about nepotism

இந்தநிலையில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிஷேஷ் தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் உள்ளது என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் பசங்க 2 படத்தில் முனீஸ்காந்த் மகனாக நடித்து பிரபலமானவர். இவர் கூறுகையில், நெப்போட்டிசம் இங்கும் உள்ளது, அது பெரும் மன வழியை கொடுக்கிறது. நாங்கள் கஷ்டப்பட்டு ஆடிசன் சென்று படங்களுக்கு தேர்வாகுறோம். ஆனால் விஜய் சேதுபதியின் மகன் எடுத்த எடுப்பில் ஹீரோவாகி விட்டார்.

Vijay sethupathi son

இது நியாயமே இல்லை, என் அப்பாவால் நான் இங்கு இல்லை என கூறும்போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எந்த பின்புலமும் இல்லாமல் வருபவர்களுக்கு வாய்ப்பு தராமல் விஜய் சேதுபதியின் மகன் என்பதாலே அவருக்கு வாய்ப்பை தருகின்றனர் என புலம்பியுள்ளார். நெப்போட்டிசம் தவறு தான். ஆனால் பிரபலங்களின் பிள்ளைகளுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்தானே. விஜய், சூர்யா, தனுஷ் கூட நெப்போட்டிசத்தால் வந்தவர்கள் தான் என நெட்டிசன்கள் கருத்து சொல்கிறார்கள்.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top