ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் நம்ரதா. ஹைதராபாத் ,விஜயவாடா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் கருத்தரிப்பு மையங்களை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத தம்பதிகளிடம் சோதனை குழாய் மற்றும் வாடகை தாய் மூலமாக குழந்தைகளை பெற்று தருவதாக நம்ப வைத்தார். அதன்படி வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தி வந்துள்ளார் .தம்பதியின் விந்தணு மற்றும் கருமுட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதி அளித்தார். இதற்காக தம்பதிகளிடம் 30 முதல் 40 லட்சம் வரை வசூல் செய்துள்ளார். மேலும் வாடகை தாய் பராமரிப்புக்கும் சேர்த்து கூடுதல் பணம் வசூலித்து வந்தார்.
ஆனால் இந்த கருத்தரிப்பு மையத்தில், கடத்தப்படும் குழந்தைகளை வாடகைத்தாய் முறையில் பெற்றதாக கூறி தம்பதியினர் புகார் அளித்துள்ளார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் நம்ரதா உட்பட எட்டு பேரை கைது செய்தார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலோடு சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளை கடத்தி வந்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளை வாங்கிய 80 தம்பதிகள் ஏமாற்றம் அடை ந்துள்ளார்கள். இதனை அறிந்த காவல் துறையினர் நம்ரதா மற்றும் அவருடைய மகன் ஜெயந்த் கிருஷ்ணாவின் வங்கி கணக்குகளை மூடியுள்ளார்கள்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…