#BIG BREAKING : வழக்குகள் அனைத்தும் ரத்து…. முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு….!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரம்மாண்ட திட்டங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை அறிவித்தார். அமைதியான முறையில் அறவழியில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, கடந்த 2021-2026 திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயப் பெருமக்கள் மற்றும் ஆசிரியர் சமூகத்தினர் மீது பதியப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அத்துடன், மாநிலத்தின் குடிநீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் முதலமைச்சர் வெளியிட்டார். வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, ரூ. 4,800 கோடி ஒதுக்கீட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் அமைக்கப்படும். மேலும், ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 500 கோடியும், சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை உயர்த்த ரூ. 410 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, மதுரை மற்றும் கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதியை உயர்த்த ரூ. 1,000 கோடியும், 33 பழமையான கூட்டுக் குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ. 300 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.

Nanthini

Recent Posts

“கடைசி நொடி…” நண்பர்களுடன் ஜாலியாக டான்ஸ் ஆடிய சிறுவன்… திடீரென மயங்கி விழுந்து இறந்த சோகம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டம், கொஸ்கி நகராட்சிக்குட்பட்ட போதிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோக சம்பவம் ஒன்று…

13 minutes ago

“ஜப்பானின் முதல் எழுத்தறிவுத் தூதர்…” நேபாளத்தில் வளர்ந்த 17 வயது மாணவி அதிதி பௌடேல் சாதனை… குவியும் பாராட்டுக்கள்…!!

ஜப்பானில் பிறந்து, தனது சிறுவயதுக் காலத்தை நேபாளத்தில் கழித்த அதிதி பௌடேல் என்ற 17 வயது மாணவி, ஜப்பானின் முதல்…

33 minutes ago

சென்னை திமுகவில் மெகா ஆபரேஷன்…. 6 மாவட்டங்கள் 10-ஆக மாற்றம்…. முன்னணி அமைச்சர்களுக்கு அதிர்ச்சி?…. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தனது உட்கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் தீவிரப் பணியில் இறங்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும்,…

1 மணத்தியாலம் ago

“அவங்களுக்குள்ள சமரசம் ஆகிடும் போலயே”….. எஸ்பிஐ வங்கி மேலாளர் வழக்கில் உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!

சென்னை அடையாறில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான…

1 மணத்தியாலம் ago