தமிழகத்தில் முதல் பட்டதாரி, கைவிடப்பட்ட பெண், விதவை, திருமணமாகாதவர், இருப்பிடம், வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் உட்பட 12 வகையான முக்கியச் சான்றிதழ்களை இனி தாசில்தாருக்குப் பதிலாகத் துணை தாசில்தாரே வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இம்மாற்றத்தின் மூலம் தாசில்தார்கள் நில நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு சார்ந்த முக்கியப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்பதால், ஒட்டுமொத்த வருவாய்த்துறை நிர்வாகத்தின் செயல்பாடும் மேலும் விரைவடையும்.
அதோடு, இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் போது ஏதேனும் பிழைகள் காரணத்தால் திருப்பி அனுப்பப்படும் விண்ணப்பங்களைப் பொதுமக்கள் அங்கேயே திருத்தி மீண்டும் உடனுக்குடன் சமர்ப்பிக்கும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிர்வாகச் சிக்கல்களைக் குறைத்து, பொதுமக்களுக்கு அரசுச் சான்றிதழ்கள் விரைவாகவும் தடையின்றியும் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இத்தகைய நவீனச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…