2023-ல் ஏற்பட்ட திடீர் 5 மரணங்கள்.. குணசேகரனாக மனதில் சிம்மாசனமிட்ட நடிகர் மாரிமுத்து..

By Begam

Updated on:

இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். இதில் பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால் இறந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர் நடிகர்கள்.  ஒரு சில நடிகர்களின் இறப்பிலிருந்து ரசிகர்களால் தற்பொழுது வரை மீண்டு வர முடிவதில்லை. அப்படி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து மறைந்த ஒரு சில பிரபலங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

நடிகர் மாரிமுத்து:

   

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன்  கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களில் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் நடிகர் மாரிமுத்து.  இவர் எதிர்நீச்சல் சீரியல் டப்பிங்கின் போது  மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார் இவரின் மறைவை தற்போது வரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நடிகர் மயில்சாமி:

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. மக்கள் மத்தியில் தனது காமெடியின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்தவர்.  தீவிர சிவ பக்தன் ஆன இவர் சிவராத்திரி அன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது உதவும் குணம் பற்றி நமக்கு சொல்ல சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு அனைவருக்கும் உதவக் கூடியவர். இவரது இழப்பு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகர் மனோபாலா:

தமிழ் சினிமாவின் பல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றியவர் நடிகர் மனோபாலா. இவர்  திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். ஒல்லியான தோற்றமும்,  எதார்த்தமான உடல் மொழியும் இவரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. 69 வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்ட னி. இவரது மகள் மீரா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக இவர் எடுத்த இந்த முடிவு தற்பொழுது வரை அவரது குடும்பத்தில் மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது.

பங்காரு அடிகள்:

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகள். இவர் ஆசிரியராக பணி புரிந்தவரும் கூட. ஆசிரியராக இருந்த இவர் அருள்வாக்கு கூறுதல், வேப்பிலை மந்திரத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். உலகில் உள்ள எந்த ஒரு இந்து கோயில்களிலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை அனுமதிப்பதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்தால் தீட்டு என்பதை தகர்த்தெறிந்தவர் பங்காரு அடிகளார். இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது மரணம் தற்பொழுது வரை அவரது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pangaru