சென்னை ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியை…. காண குவிந்த ஒட்டுமொத்த திரை பிரபலங்கள்…. வைரலாகும் புகைப்படங்கள்…

Spread the love

2023 ஆம் ஆண்டின் 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது மிக பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனை ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகிறார்கள்.

இந்த வருடம் ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் இருந்தே அபாரமாக தங்களின் ஆட்டத்திறமையை ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே,மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் உள்ளிட்ட அணிகள் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த போட்டி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டி நடைபெறும் போதும் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று போட்டியை கண்டு களிக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.

அதன்படி நேற்று சிஎஸ்கே அணி மற்றும் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியை அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலின்,மகன் உதயநிதி மற்றும் அமைச்சர் அன்புமணி மகேஷ் ஆகியோருடன் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை கண்டு ரசித்தார். அது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் சிஎஸ்கே ஜெர்சியை அணிந்து வந்திருந்தார்.

அதனைப் போலவே புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆர்வத்துடன் போட்டியை கண்டு ரசித்தார்.

நடிகர் தனுஷ், அஜித்தின் மனைவி ஷாலினி, மகன் மகள், நடிகை பிரியங்கா மோகன், நடிகர் சதீஷ், வெங்கட் பிரபு, நாக சைதன்யா, இயக்குனர் மோகன் ஜி மற்றும் சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குவிந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சிஎஸ்கே அணிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தற்போதைய போட்டியில் சிஎஸ்கே அணி முதல் 5 போட்டிகளில் மூன்று வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

தற்போது பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Archana

Recent Posts

அக்டோபர் 10 ராகுல் விசிட்…. காங் – திமுக சேருவதை தடுக்க CM விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’…. பதற்றத்தில் திமுக…. பரபரக்கும் தமிழக அரசியல்..!

இண்டியா கூட்டணி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகள் முதன்முறையாகப் பங்கேற்ற நிகழ்வு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ள…

53 seconds ago

அட கொடுமையே… மருத்துவமனையில் உடை மாற்றும் அறை வெளியே… மருத்துவர்கள் மீது கொடூரத் தாக்குதல்… பதற வைக்கும் வீடியோ வைரல்… ம.பி – யில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள காந்தி நினைவு மருத்துவமனையில், ஆடை அறைக்கு வெளியே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொடூரமாகத்…

4 minutes ago

இரவோடு இரவாக ஆய்வு…. “இனி அதிக விலை வாங்கினா அவ்வளவுதான்”…. நள்ளிரவில் ஹோட்டல்களுக்கு அமைச்சரின் அதிரடி வார்னிங்!

இரவு நேரத்தில் நெடுஞ்சாலைகளில் இயங்கும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் உணவகங்களில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

6 minutes ago

“இதெல்லாம் ஒரு விஷயமா?”…. மணல் கொள்ளை புகாருக்கு அமைச்சரின் அலட்சிய பதில்…. அதிர்ச்சியில் அருப்புக்கோட்டை….!

அருப்புக்கோட்டையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆதரவோடு மணல் கொள்ளை நடப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து…

12 minutes ago

விஜய் – அன்புமணி ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?…. தவெக அமைச்சரவையில் பாமக…. கொதித்தெழும் திருமா…. அதிரும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற பாமக முனைப்பு காட்டுவதாகவும், அதற்காக பாமகவுக்கு இரு அமைச்சர் பதவிகளை…

16 minutes ago

திக் திக் திக்… நடுரோட்டில் நில வியாபாரி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு… பீகாரில் நடந்த கொடூரம்… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!

பீகார் மாநிலம் ஆரா பகுதியில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராஜு யாதவ் என்ற நில வியாபாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த…

18 minutes ago