xr:d:DAFsWS0zcxQ:205,j:8928788942400782862,t:23091212
பொதுவாக சிறுநீரில் ஒருவிதமான வாசனை இருப்பது சாதாரணம்தான். ஆனால் அது மிகவும் கடுமையான துர்நாற்றமாக இருந்தால் உடல்நல பிரச்சினைக்கான ஒரு முக்கிய எச்சரிக்கையாக இருக்க கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். நீரழிவு என்பது ஒரு நீண்ட கால நோய். இந்த நோயின் உடல் போதுமான அளவு இன்சுலின் உருவாக்க இயலாமல் போவது தான் அல்லது உருவான இன்சுலினை சரியாக பயன்படுத்த இயலாமையால் ஏற்படுகிறது. நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாத போது சிறுநீரில் அதிகமான சர்க்கரை வெளியேறுவதால் அது இனிப்பு அல்லது பல வாசனை ஏற்படலாம். இது உடல் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை சிறுநீரின் வழியே வெளியேற்ற முயற்சிக்கிறது என்பதை காட்டுகிறது.
சிறுநீர் பாதை தோற்று என்பது பெரும்பாலும் பெண்களில் அதிகமாக காணப்படும் ஒரு பாக்டீரியா தொற்று. பெண்களின் சிறுநீர் குழாய் ஆண்களைவிட குறுகியதாக இருப்பதால் பாக்டீரியாக்கள் எளிதாக நுழையக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. இந்த நோயால் சிறுநீரில் அமோனியா போல வாசனை எரிச்சல், எப்போதும் சிறுநீர் பொழிவதற்கான உணர்வு, கீழ்ப்பக்க வயிற்று வலி போன்றவை காணப்படும். அடுத்து தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் உடல் நீர் இழப்பை சந்திக்கும். இதனால் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். சிறுநீர் நிறம் மஞ்சள் அல்லது அடர் நிறமாக காணப்படும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.வழக்கமான சிறுநீர் வெளியீடு, வாசனையை கவனிக்க வேண்டும். சந்தேகம், மாற்றம் வந்தால் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…