Categories: TRENDING

ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தை கடந்த அயலான் vs கேப்டன் மில்லர்.. ஜெய்ததது யார்..? அதிரடியாக வெளியான கலெக்ஷன் ரிப்போர்ட்..

பொங்கல் விழாவை முன்னிட்டு திரையரங்குகளில் பல படங்கள் வெற்றிநடை போட்டு வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் ரேஸாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படமும் ; சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அயலான்’ திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் அடிப்படையில் எது வெற்றி பெற்றது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த கேப்டன் மில்லர் VS  அயலான் திரைப்படத்தின் வசூல் ரீதியான முடிவை பாக்ஸ் ஆபிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இரு படங்கள்  மட்டுமில்லாமல் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையேயான மோதலை பற்றியும் பேசப்பட்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நண்பர்களாக இருந்தனர், சில கருத்துவேறுபாடு  காரணமாக இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இருவருக்கும் போட்டி போடும் விதமாக அவர்களின் படங்கள் பொங்கலில்  வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜனவரி 12 தேதி வெளியான இரண்டு படங்களில் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் அதிக வசூலையும்; தனுசு ரசிகர்களின்  கொண்டாட்டத்தையும் கண்டு சிவகார்த்திகேயன் பட குழுவினர் அதிர்ந்து போனார்கள். அப்போதைய நிலைமையில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் அதிக வசூலை பெறவில்லை.

அதன்பின், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன் என்பதால் குடும்பத்துடன் இணைந்து படத்திற்கு அனைவரும் சென்றனர். இதனால் சூடுபிடிக்க தொடங்கிய அயலான் 50 கோடி வசூலை ஈட்டியது என பட குழுவினர் தெரிவித்தனர். மேலும் கேப்டன் மில்லர் பட குழுவினர் தனது வசூல் ரிப்போர்ட்டை அறிவிக்கவில்லை. ஏனெனில் முதல் நாள் மட்டுமே நல்ல வசூலை ஈட்டிய  கேப்டன் மில்லர் திரைப்படம் அதன்பிறகு, அதிக விமர்சனங்களை பெற்றதால் வசூல் ரீதியாக குறைய தொடங்கியது.

இதனால் எந்த அறிவிப்பையும் பட குழுவினர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை  கொடுத்தது.  இதில் அயலான் திரைப்படம் 60 கோடி வசூலை ஈட்டியது எனவும்; கேப்டன் மில்லர்  திரைப்படம் 40 கோடி வசூலை ஈட்டியது எனவும் தெரிவித்து இந்த பொங்கல் ரேசில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான்  திரைப்படம் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago