கோலாகலமாக நடந்த நடிகர் விஜய் கணேஷ் மகனின் திருமண வரவேற்பு.. ஒன்று திரண்ட பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகரான வடிவேல் உடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் நடிகர் விஜய் கணேஷ். இவர் வடிவேல் உடன் இணைந்து வக்கீல் வண்டு முருகன் காமெடியில் அம்மிக்கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல இருக்கிறது என் கட்சிக்காரரின் தலை என்ற வசனம் மூலம் புகழ்பெற்றார். கடந்த 1985-ம் வருடத்தில் இருந்து சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் விஜய் கணேஷ் பல படங்களில் நடித்து வந்தார்.

சென்னையில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே பட வாய்ப்புக்காக முயற்சி செய்துள்ளார். பாடல் ஆசிரியர் ஒருவருடன் கிடைத்த நட்பின் மூலமாக கல்லூரி மாணவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் கணேஷ் என்ற பெயரை விஜய் கணேஷ் என மாற்றிக் கொண்டார். வடிவேல் உடன் இணைந்து விஜய் கணேஷ் 62 படங்களில் நடித்துள்ளார்.

இப்போது அவ்வளவாக படங்களில் இவர் நடிப்பதில்லை. விஜய் கணேசன் சொந்த ஊர் புதுக்கோட்டை மணல்மேல்குடி கிராமம். இவருக்கு விவசாயம் மீது அதிக ஆர்வம் உண்டு. ஒரு சில கலை நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வருகிறார். கலை நிகழ்ச்சிகள் மூலம் நிறைய விருது வாங்கியுள்ளார். இந்நிலையில் விஜய் கணேஷ் மகன் வி.வீரபாண்டி என்ற விஜயகுமாருக்கும் காவியா என்ற பெண்ணுக்கும் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி குன்றத்தூரில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.கே.எம் சின்னையா, அதிமுகவை தலைவர் தமிழ் மகன், எஸ்பி வேலுமணி, வருகை பகுதி செயலாளர் ஏ.எம் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் நடிகை வடிவுக்கரசி, அனுமோகன், பெஞ்சமின், பூச்சி முருகன், காதல் சுகுமார், பாபா லட்சுமணன், அம்பானி சங்கர், ஜூலி பாஸ்கர், விசித்திரன், இமான் அண்ணாச்சி என திரையுலகை சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது அதனை பார்த்த ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

#image_title

admin

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

45 seconds ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

10 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

19 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

29 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

39 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

44 minutes ago