Categories: சினிமா

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

Spread the love

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து வட்டம், கடாவர் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார்.

இந்த நிலையில் அதுல்யா ரவியின் கோவை வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகை அதுல்யா ரவி தனது தாய் விஜயலட்சுமி உடன் வடவள்ளி பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். விஜயலட்சுமி செல்வி என்பவரை பணிப்பெண் வேலைக்கு பணியமர்த்தியுள்ளார். நீண்ட நாட்களாக அவர்தான் அதுல்யா ரவியின் வீட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே பீரோவில் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக திருடு போனது.

இது பற்றி விவரம் தெரியாததால் அதுல்யா ரவியும் அவரது தாயும் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினார்கள். அடிக்கடி இருவரும் சென்னை சென்று வருவதால் திருட்டு குறித்து அறிய முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பணிப்பெண் செல்வியும் விஜயலட்சுமியின் தோழி சுபாஷினியும் இணைந்து வீட்டுக்குள் நுழைந்து 2000 ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்கள் நினைத்தது போல பீரோவில் அதிக பணம் இல்லை.

இதனால் அவ்வளவாக பணம் வைப்பதில்லை, 2000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொள்ளலாம், பாஸ்போர்ட்டையும் எடுத்து சென்று விட்டால் அவர்கள் தேடி அலையட்டும் என்று இருவரும் பேசி கொள்கின்றனர். அந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வி மற்றும் அவரது தோழி சுபாஷினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருவரும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

admin

Recent Posts

“என் ஒரே மகள்”.. கதறிய தந்தை!… மருத்துவமனையில் நடந்தது என்ன?… ரூ.3 லட்சம் கேட்டதாகப் புகார்… பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

கல்பனா மிஸ்ரா தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில், பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்,…

3 minutes ago

அன்பில் மகேஷை தொடர்ந்து அடுத்த குறி யார்? பதற்றத்தில் உறைந்த முன்னணி திமுக தலைவர்கள்… வாத்தி ரைடு.. திமுக Ex அமைச்சர்கள் ஹிட் லிஸ்ட்…!

திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது…

3 minutes ago

கலங்கும் தவெக முகாம்…. மவுசை மீட்க களத்தில் இறங்கும் விஜய்… அடுத்த டார்கெட் இந்த மாவட்டங்களா?… இடைத்தேர்தல் ட்விஸ்ட்…!

தவெகவின் தலைவர் விஜய், வரவிருக்கும் இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு முன்கூட்டியே கள ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளத்…

9 minutes ago

பலே லேடீஸ் கேங்!… “கொஞ்சம் நகைய காட்டுங்க”… ரூ.45 லட்சம் நகை மாயம்… CCTV-யில் சிக்கிய முகம்… கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

மத்தியப் பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு நகைக்கடைக்குள் புகுந்த மூன்று பெண்கள், சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை…

13 minutes ago

ரூ.100 கோடி மோசடி வழக்கு… கோர்ட்டில் சரண் அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார்…. பரபரப்பு உத்தரவு….!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி அளவில் மாபெரும் மோசடி நடந்ததாக எழுந்துள்ள புகாரில், தலைமறைவாக இருந்த முன்னாள்…

13 minutes ago

மரண பயம்..! “உன் கதை முடிஞ்சது!”… எச்சரித்தும் அடங்காத வாலிபர்… ‘இன்ஸ்டா’ காதல் விவகாரம்… வீட்டின் மீது பறந்த பெட்ரோல் குண்டு…!!

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும், கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவிக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே…

28 minutes ago