கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

By admin on ஆடி 5, 2024

Spread the love

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து வட்டம், கடாவர் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார்.

அதுல்யா ரவி Photos & Images # 4593 - Filmibeat Tamil

   

இந்த நிலையில் அதுல்யா ரவியின் கோவை வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகை அதுல்யா ரவி தனது தாய் விஜயலட்சுமி உடன் வடவள்ளி பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். விஜயலட்சுமி செல்வி என்பவரை பணிப்பெண் வேலைக்கு பணியமர்த்தியுள்ளார். நீண்ட நாட்களாக அவர்தான் அதுல்யா ரவியின் வீட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே பீரோவில் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக திருடு போனது.

   

அதுல்யா ரவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்-Actress Athulya Ravi latest stills - Vikatan

 

இது பற்றி விவரம் தெரியாததால் அதுல்யா ரவியும் அவரது தாயும் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினார்கள். அடிக்கடி இருவரும் சென்னை சென்று வருவதால் திருட்டு குறித்து அறிய முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பணிப்பெண் செல்வியும் விஜயலட்சுமியின் தோழி சுபாஷினியும் இணைந்து வீட்டுக்குள் நுழைந்து 2000 ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்கள் நினைத்தது போல பீரோவில் அதிக பணம் இல்லை.

நடிகை அதுல்யா ரவி – Seithi Solai

இதனால் அவ்வளவாக பணம் வைப்பதில்லை, 2000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொள்ளலாம், பாஸ்போர்ட்டையும் எடுத்து சென்று விட்டால் அவர்கள் தேடி அலையட்டும் என்று இருவரும் பேசி கொள்கின்றனர். அந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வி மற்றும் அவரது தோழி சுபாஷினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருவரும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by NewsTamil 24×7 (@newstamiltv24x7)