பொங்கல் விழாவை முன்னிட்டு திரையரங்குகளில் பல படங்கள் வெற்றிநடை போட்டு வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் ரேஸாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படமும் ; சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அயலான்’ திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் அடிப்படையில் எது வெற்றி பெற்றது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த கேப்டன் மில்லர் VS அயலான் திரைப்படத்தின் வசூல் ரீதியான முடிவை பாக்ஸ் ஆபிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இரு படங்கள் மட்டுமில்லாமல் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையேயான மோதலை பற்றியும் பேசப்பட்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நண்பர்களாக இருந்தனர், சில கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இருவருக்கும் போட்டி போடும் விதமாக அவர்களின் படங்கள் பொங்கலில் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜனவரி 12 தேதி வெளியான இரண்டு படங்களில் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் அதிக வசூலையும்; தனுசு ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் கண்டு சிவகார்த்திகேயன் பட குழுவினர் அதிர்ந்து போனார்கள். அப்போதைய நிலைமையில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் அதிக வசூலை பெறவில்லை.

அதன்பின், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன் என்பதால் குடும்பத்துடன் இணைந்து படத்திற்கு அனைவரும் சென்றனர். இதனால் சூடுபிடிக்க தொடங்கிய அயலான் 50 கோடி வசூலை ஈட்டியது என பட குழுவினர் தெரிவித்தனர். மேலும் கேப்டன் மில்லர் பட குழுவினர் தனது வசூல் ரிப்போர்ட்டை அறிவிக்கவில்லை. ஏனெனில் முதல் நாள் மட்டுமே நல்ல வசூலை ஈட்டிய கேப்டன் மில்லர் திரைப்படம் அதன்பிறகு, அதிக விமர்சனங்களை பெற்றதால் வசூல் ரீதியாக குறைய தொடங்கியது.

இதனால் எந்த அறிவிப்பையும் பட குழுவினர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதில் அயலான் திரைப்படம் 60 கோடி வசூலை ஈட்டியது எனவும்; கேப்டன் மில்லர் திரைப்படம் 40 கோடி வசூலை ஈட்டியது எனவும் தெரிவித்து இந்த பொங்கல் ரேசில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

