நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார் ஏ ஆர் முருகதாஸ். இவர் திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை தயாரித்தும் அதில் திரைக்கதை வசனங்களையும் எழுதியுள்ளார். இவர் தற்போது விலை உயர்ந்த காரை வாங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

ஏ ஆர் முருகதாஸ் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறிப்பாக, விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்திரைப்படத்தில் புரட்சிகரமான கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதும் பாராட்டை பெற்றது. ரமணா திரைப்படம் தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியானது, இந்த திரைப்படம் தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பும் பெற்றது.

ஏ ஆர் முருகதாஸ் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தில் தொடங்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் வரை இயக்கி திரையுலகில் நல்ல இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார். இவர் இயக்கத்தில் உருவான படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ ஆர் முருகதாஸ் தற்போது 1.59 கோடி மதிப்புள்ள பிளாக் கலர் BMWX7 காரை வாங்கி குடும்பத்துடன் எடுத்த போட்டோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

