#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி திரைப்படம் மூலம் வரலட்சுமி திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு முன்பு சங்கர் இயக்கிய பாய்ஸ், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் உள்ளிட்ட படங்களில் நடிக்க வரலட்சுமிக்கு வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் சரத்குமார் மறுப்பு தெரிவித்ததால் வரலட்சுமி அந்த படங்களை தவறவிட்டார்.
முதல் படமான போடா போடி படத்திலேயே வரலட்சுமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹீரோயின் கதாபாத்திரத்தை விட வில்லி கதாபாத்திரம் வர லட்சுமிக்கு கச்சிதமாக பொருந்துகிறது. விஜயின் சர்கார், தனுஷின் மாரி 2, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் வரலட்சுமி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது வரலட்சுமிக்கு 38 வயது ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமி மற்றும் அவரது நீண்ட நாள் காதலன் நிக்கோலாய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஜூலை மாதம் இரண்டாம் தேதி நடைபெற இருக்கும் திருமணத்திற்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரை உலகை சேர்ந்த ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரலட்சுமி திருமண கொண்டாட்டங்கள் ஸ்டார்ட் ஆகியுள்ளது. மாலை அணிந்து. அறும் நிக்கோலாயை ராதிகா, வரலட்சுமி ஆகியோர் வரவேற்று கட்டி அணைக்கின்றனர். திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…