Byjus

சாதாரண டியூசன் சென்டரான BYJUS.. சாதித்த வரலாறு.. ரியல் ‘வாத்தி’ யாக மாறியது இப்படித்தான்

By admin on மாசி 14, 2024

Spread the love

தனுஷ் நடித்த ‘வாத்தி‘ படத்தில் வருவது போல தான் நடத்திய டியூசன் சென்டரில் மாணவர்களுக்கு கற்பித்த கல்வியை வீடியோவாக எடுத்து அதை பதிவேற்றம் செய்து இன்று டிஜிட்டல் யுனிவர்சிட்டி அளவிற்கு வளர்ந்துள்ளது தான் BYJUS. இன்று இந்தப் பெயரைத் தெரியாத கல்வி நிறுவனமும், மாணவர்களும் கிடையாது. இணைய வழிக் கல்வியில் பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல் பில்லியனில் புழங்கும் பிசினஸாகவும் மாற்றியிருக்கிறார் இதன் நிறுவனர் பைஜு ரவீந்திரன். கேரளாவைச் சேர்ந்த இவர் கண்ணூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பி.டெக்.

ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பைஜு ரவீந்திரன். தன் நண்பர்களுக்காக ஒருமுறை CAT தேர்விற்கு அவர்களுக்காக சொல்லிக் கொடுக்கும் போது தனக்குள் இருக்கும் இந்த ஆர்வத்தை அவரே கண்டுபிடித்தார். பின்பு தான் கற்பிப்பதை வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். தான் பதிவு செய்து வைத்தவீடியோக்களை பைஜு என்னும் இணையதளத்தினைத் தொடங்கி அதில் பதிவிட ஏராளமான பார்வைகளைப் பெற்றது இவரின் கற்றல் முறை.

   
BYJUS

#image_title

   

இந்நிலையில் தனது பொறியாளர் வேலையை விடுத்து கடந்த 2011-ல் ஐஐஎம்களில் பட்டம் பெற்ற அவரது முன்னாள் மாணவர்களின் உதவியுடன் BYJU வகுப்புகளைத் தொடங்கினார். பைஜூவின் புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்தது. அபார வளர்ச்சியால் கடந்த 2015 ஆம் ஆண்டில் பைஜுவின் கற்றல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

 

யார் இந்த சைதை துரைசாமி..? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்டாடும் காரணம் இதானா?

இதன் முதல் ஆண்டில் மட்டும் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் நிறுவனத்தின் வெற்றியை மேலும் உயர்த்தியது. இன்று, BYJU இன் உலகளாவிய ரீதியில் 15 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் மற்றும் 900,000 பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் உள்ளனர், 1-12 வகுப்பு மாணவர்களுக்கும் IIT-JEE, NEET, CAT, GRE மற்றும் GMAT போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் ஆன்லைன் பயிற்சியை வழங்கி ஒரு டிஜிட்டல் யுனிவர்சிட்டியாகவே திகழ்கிறது.

BYJUS 2

#image_title

இன்று இந்தியா முழுவதும் டிஜிட்டல் கல்வியில் முன்னனி ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் திகழும் BYJUS மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகள் அனைத்தையும் வழங்குகிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை பெறப்பட்டு இன்று கோடிகளில் புரளும் நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தான் இணைய வழிக் கல்வி உலகம் முழுவதும் கட்டாயமாக அப்போது BYJUS உச்சம் தொட்டது. இன்று சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்பில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு BYJUS தனது கல்விச் சேவையை அளித்து வருகிறது.

தன் திறமையை சரியான விதத்தில் பயன்படுத்தி இன்று கல்வித் துறையில் புது டிரெண்டிங்கையே உருவாக்கி இருக்கிறார் பைஜு ரவீந்திரன்.