சூர்யா அப்பா சிவகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ள ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை… பல வருசத்துக்கு அப்றமா சீரியலில் கொடுத்த ரீ என்ட்ரி…

By Begam on மாசி 14, 2024

Spread the love

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இதிலும் முத்து செய்யும் சேட்டைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் கதாநாயகன் முத்து, தண்ணி அடித்துக் கொண்டு திரியும் ஊதாரி நபராக இருக்கிறார். அப்போது அவருக்கு குடும்ப பாங்காக இருக்கும் மீனாவுடன் திருமணம் நடைபெறுகிறது.

   

மீனாவுக்கு இந்த திருமணத்தில் சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கின்றனர். முத்துவின் தாயார் விஜயாவுக்கும் முத்து மற்றும் மீனாவை சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் தனது மூத்த மகன் மனோஜ் மீதுதான் பாசம் காட்டுகிறார். அவருக்கு தனது இளைய மகன் முத்துவையும் அவரது மனைவி மீனவையும் சுத்தமாக பிடிப்பதில்லை. இந்த நிலையில்  மூத்த மகன் மனோஜ்க்கும் ரோகினிக்கும் விஜயா திருமணம் செய்து வைக்கிறார்.  இதைத்தொடர்ந்து ரவி தான் காதலித்த ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறான். இப்படி பல திருப்பங்களை கடந்து இந்த சீரியல் தற்பொழுது புது புது கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

   

#image_title

 

இந்நிலையில் ‘ சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை ஒருவர் சிவக்குமாருக்கு காதலியாக நடித்து, அதன் பின்பு தான் இப்போது சீரியலில் நடிக்க வந்திருக்கிறார் என்ற விஷயம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அவுங்க யாருன்னு தெரியுமா…? வேறு யாருமில்லை . நம்ம பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரேவதி அவர்கள் தான். 80 வயதை கடந்தும் சின்னத்திரையில் பாட்டி வேடத்தில் கலக்கி வரும் இவர், சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரைகளில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் நிறைய கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் சூர்யா, கார்த்தி இவர்களின் தந்தையும் நடிகருமான சிவகுமாரின் முதல் படமான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் அவருக்கு முதல் ஜோடியும், காதலியுமாக நடித்துள்ளார். ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில்  மாமியார் விஜயாவை  அடக்கி ,குடும்பத்திற்குள் ஒற்றுமையை கொண்டு வருவதால்  இவருக்கென தற்பொழுது தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.