“உசுருள்ள வரைக்குமே உனக்கென்ன புடிக்கணும்”.. காதல் மனைவி நயன்தாராவை நினைத்து உருகும் விக்கி.. வைரலாகும் போட்டோஸ்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  மலையாள திரையுலகிலிருந்து பல நடிகைகள் தமிழுக்கு வந்து வெற்றி கண்டுள்ளனர். அவர்களின் முக்கியமானவர் நடிகை நயன்தாரா, இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார். தமிழ் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ திரைப்படம் தொடங்கி, தற்பொழுது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான  ‘ஜவான்’ திரைப்படம் வரை தனது  நடிப்பால் ரசிகர்களை வாய்ப்பிளக்கச் செய்து வருகிறார்.

   

தற்பொழுது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று, தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து super star ஆக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் ‘தி ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும்  இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி நடிகை நயன்தாரா லிப் பாம், நாப்கின் போன்ற பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார். 9skin  என்ற பெயரில் சில productகளையும் லான்ச் செய்தார் .இப்படி வெற்றிகரமாக தனது சினிமா கெரியர் , குடும்ப வாழ்க்கை இரண்டையும் மேனேஜ் செய்து successful women- ஆக வலம் வந்து கொண்டுள்ளார்.

சோசியல் மீடியாவிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் மனைவி நயன்தாராவுக்கு valentines day wish செய்து தங்களது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த  பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)