இந்த தடவை கண்டிப்பா மிஸ் ஆகாதாம்.. 1000 கோடிக்கு ரெடியான சூர்யா பட இயக்குனர்.. ராமாயணத்தை ஓரம் கட்ட வரும் மஹாபாரதம்..

By Begam on மாசி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் லிங்குசாமி.   இவர் ‘ஆனந்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து ரன் சண்டைக் கோழி ,பீமா, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல வெற்றிப் படங்களை திரையுலகில் கொடுத்தார்.

   

நன்றாக சென்று கொண்டிருந்த இவரது திரைவாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளிவந்த விஷாலை வைத்து இயக்கிய  சண்டைக்கோழி 2 , விக்ரமை வைத்து இயக்கிய பீமா,  கார்த்தி நடிப்பில் பையா, சூர்யா நடிப்பில் அஞ்சான் , அஜித் வைத்து இயக்கிய ஜி, போன்ற பல திரைப்படங்கள் தோல்வியையே தழுவியது.

   

 

இதனால் தமிழை விட்டு விட்டு தெலுங்கு பக்கம் சென்ற இவர்  நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தி வாரியர் என்னும் படத்தை இயக்கி தரமான கம்பேக் கொடுக்க நினைத்தார். ஆனால் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால்  தற்பொழுது அவர்  மகாபாரதக் கதையை மையப்படுத்தி பிரம்மாண்டமான ஒரு இதிகாச படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

#image_title

தற்பொழுது இதிகாச கதைகளை வைத்து படங்கள் இயக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் இதன்மூலம் நல்ல லாபம் பார்க்க முடிகிறதாம். எப்படியாவது ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்று இருக்கும் இயக்குனர் லிங்குசாமியும் தற்பொழுது மகாபாரதக் கதையை வைத்து ஒரு படம் எடுத்து 1000 கோடியை பார்த்தாக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். இதற்கான முயற்சிகளில் அவர் இறங்கி விட்டதாகவும், விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.