அரசுப் பணிகளில் மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் இவர் பெயரை உச்சரிக்கமாமல் இருந்ததில்லை. இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் குடிமைப் பணி அதிகாரிகளாகத் திகழும் பலர் சைதை துரைசாமியின் பயிற்சியகத்திலிருந்து படித்து வெற்றி பெற்று இன்று வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர். இவ்வளவு சாதனைக்குச் சொந்தக்காரரான சைதை துரைசாமியின் மினி வரலாறு இதான்.
தமிழகத்தின் ஆட்டோமொபைல் நகரம் என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டதைச் சேர்ந்தவர்தான் துரைசாமி. எம்.ஜி.ஆரின் மேல் தீவிர பற்றுக் கொண்டவர். அஇஅதிமுகவை எம்.ஜி.ஆர் ஆரம்பித்த போது அவருடன் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இன்று அதிமுகவின் முக்கியப் பிரமுகராகத் திகழ்கிறார். என்னதான் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டாலும் எம்.ஜி.ஆரைப் போல் தர்மங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர்.

#image_title
தான் முதன் முதலாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலேயே தமிழகத்தில் எந்த எம்.எல்.ஏவும் இதுவரை செய்யாத வகையில் தனது தொகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் இலவசமாக டைப்ரைட்டர், ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்தவர்.
தீவிர அரசியல்வாதியாக இருந்தாலும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தொண்டு செய்வதையே முழுநேரப் பணியாக்கி மனித நேய அறக்கட்டளை என்னும் அமைப்பினை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் கஷ்டப்படுகிற, படிக்க இயலாத, திறமைகள் இருந்தும் வசதி இல்லாத மாணவர்களுக்கு பண உதவியும், தகுந்த திறன் பயிற்சிகளையும் தனது அமைப்பின் மூலமாக திறம்படச் செய்து வருகிறார். இவருடைய முக்கியப் பணியே திறமை வாய்ந்த குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்குவது தான். இன்று இந்தியா முழுவதும் பல முக்கியப் பொறுப்பில் இருக்கும் IAS, IPS அதிகாரிகள் இவரின் மனிதநேயப் பயிற்சி மையத்தின் மூலம் படித்து வெற்றி பெற்றவர்களே.
மேலும் சென்னை வேளச்சேரியில் இவர் வைத்துள்ள திருமண மண்டபத்தில் ஏழை மக்கள் இலவசமாக தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும் வழிவகை செய்து தருகிறார். மேலும் அதிமுகவின் முதல் சென்னை மேயரும் இவர்தான். இதுமட்டுமல்லாது சைதாப்பேட்டைத் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானமையால் இவருக்கு சைதை துரைசாமி என்ற பெயர் வந்தது.

#image_title
இவ்வாறு பல நல்ல செயல்களின் மூலமாக மக்கள் மத்தியில் நற்பெயர் எடுத்த சைதை துரைசாமிக்கு இடியாய் வந்து விழுந்தது அவர் மகன் வெற்றி துரைசாமியின் மரணச் செய்தி. தற்போது மகனை விபத்தில் இழந்து மீளாத் துயரில் தவிக்கும் சைதை துரைசாமிக்கு நாமும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
