தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய் பல சிக்கல்களை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அதன்படி வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கான அனுமதியை இதுவரை பெற முடியாமல் இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக DGP அலுவலகத்தை பொதுச்செயலாளர் ஆனந்த் நாடியுள்ளார். நேற்று அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற போது எதுவும் பேசாமல் சென்ற அவர் தற்போது நாளை மீண்டும் ஆலோசனைக்கு பிறகு முடிவு தெரியும் என அப்டேட் கொடுத்துள்ளார். வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியின் காலாப்பட்டு முதல் கன்னி கோவில் வரை விஜயின் ரோடு சோவை நடத்த தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…