Connect with us

TRENDING

மறுக்கப்பட்ட சொத்துக்கள்.. தனியாளாக ஒரு சாம்ராஜ்ஜியத்தே உருவாக்கிய அம்பானியின் சகோதரி.. யார் இந்த நீனா கோத்தாரி..?

பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் தங்கையும், கோத்தாரி நிறுவனத்தின் அதிபருமான நீனா கோதாரி அவர்களை தான் சற்று பார்க்க உள்ளோம்; நேற்று நடந்த உலக பெண்கள் தினம் அன்று, பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் நீனா கோத்தாரி அவர்களின் வாழ்க்கை சரிதம் தான் மிகப் பேசும் பொருளாக மாறி உள்ளது. reliance அதிபரான திருபாய் அம்பானி மற்றும் கோக்கிலபென் அம்பானிக்கு நான்கு குழந்தைகள் உள்ளது. அதில் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, நீனா அம்பானி, தீப்தி அம்பானி ஆகும். தற்போது கிருபாய் அம்பானி அவர்களின் மறைவிற்கு முன்பாகவே இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்ததால், அவர் இறந்தபின் ரிலையன்ஸ் நிறுவனத்தை இரண்டு மகன்களும் எடுத்த நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால் இரு பெண்களின் நிர்வாக திறமை பலருக்கும் தெரியாமல் இருந்தது. 1989 ஆம் ஆண்டு நீனா அம்பானி சாயம் கோத்தாரி அவர்களை திருமணம் செய்து கொண்டு, நீதா கோத்தாரியாக மாறினார். என்னதான் கல்யாணம் செய்து இருந்தாலும் தான் அம்பானி மகளாக இருப்பதால், தொழிலில் ஆர்வம் கொண்ட நீதா கோத்தாரி, 2003 ஆம் ஆண்டு தனது வர்த்தக பாதையில் காலடி எடுத்து வைத்தார். ஜாவா கிரீன் என்ற காபி மற்றும் உணவு விற்பனை தொழிலை ஆரம்பித்தார். ஆனால் அது இந்தியாவில் பெரிதளவு போகாததால், அதை கைவிட்டு விட்டு, தனது இல்லற வாழ்க்கையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். ஆனால் இவர் எதிர்பாராத விதமாக 2015 ஆம் ஆண்டு இவர் கணவரான சாயம் கோதாரி புற்றுநோய் பாதிக்கப்பட்டு காலமானார். தன் இரும குழந்தையான நயன்தாரா கோத்தாரி, அர்ஜுன் கோத்தாரி அவர்களை வளர்க்கும் கட்டாயத்திற்கு ஆளானார்.

   

அதனால் வேறு வழியின்றி கோத்தாரி சுகர் நிறுவனத்தை கையில் எடுத்து நடத்த ஆரம்பித்தார். இதன்பின் தான் இவர் வர்த்தக பாதையின் முன்னேற்றமே ஆரம்பித்தது. தற்போது இந்த நிறுவனத்தை எடுத்து நடத்திய பின் நல்ல வருமானத்தை ஈட்டி நிறுவனத்தை பல மடங்கு பெரிதாக்கினார். இதைத்தொடர்ந்து கோத்தாரி பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம் மற்றும் கோத்தாரி சேஃப் டெபாசிட் நிறுவனம் என்று இரு நிறுவனங்களை புதிதாக துவங்கினார். இது இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து நல்ல வருமானத்தை ஈட்டியது. இதில் திருச்சி கோவை என்று பல இடங்களில் நிறுவனத்தின் கிளைகள் அமைத்து, தற்போது இந்த கோத்தாரி நிறுவனத்தை உலக வர்த்தக நிறுவனமாக மாற்றம் செய்து கொண்டு வருகிறார்.

இந்த நிறுவனத்தில் தனது மகன் அர்ஜுன் அவர்தான் மேனேஜிங் டைரக்டிங் என்ற பதவியில் இருந்து இந்த நிறுவனத்தை இவ்வளவு உயரத்திற்கு தன் அம்மாவுடன் சேர்ந்து எடுத்துச் செல்கிறார். தற்போது நீனா கோத்தாரியின் நிர்வாக திறமையால் ஷேர் மார்க்கெட்டில் இரண்டு கம்பெனிகளின் முதலீடு உள்ளதாம், இதனால் இவருக்கு கிட்டத்தட்ட 52 ஆயிரம் கோடி அளவில் சொத்து மதிப்பு ஈட்டி உள்ளாராம். தற்போதைய ஆளுமை திறமையால் தமிழ்நாடு அளவு இருந்த கோத்தாரி நிறுவனத்தை உலக அளவிற்கு எடுத்துச் சென்று பல கோடி ரூபாயை சம்பாரித்துள்ளார். நேற்று மகளிர் தினத்தை ஒட்டி நீனா கோதாரியின் வாழ்க்கை பயணத்தை பற்றி வெளிவந்த செய்திகள் தான், பல பெண்களின் வாழ்க்கைக்கு முன் உதாரணமாக அமைந்திருக்கிறது.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in TRENDING

To Top