காப்பாத்துங்க… காப்பாத்துங்க… நள்ளிரவில் இளைஞரின் அலறல் சத்தம்… நிதி நிறுவன ஊழியர் கொடூர கொலை… கர்நாடகாவை உலுக்கும் பகீர் சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி நகரைச் சேர்ந்த சுதர்சன் ரட்கல் (21) என்ற இளைஞர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சுதர்சன், பால்கி நகரில் உள்ள மாசும்பாஷா காலனி பகுதியில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட சுதர்சனை தீவிரமாகத் தாக்கிய அக்கும்பல், பின்னர் அவரைக் கொலை செய்து உடலைக் காடியால் கிராமத்திற்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் வீசிவிட்டுத் தப்பியோடியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பால்கி நகர போலீசாரும் ரயில்வே போலீசாரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கி நீதி கோரியும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இச்சம்பவம் தொடர்பாகப் பால்கி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய பாக்யவான், வித்தல், சச்சின், சாய் காம்ப்ளே மற்றும் ஆதித்யா காம்ப்ளே ஆகிய ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கான பின்னணி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

ஐயோ… என்ன இது கொடுமை… படிக்கும் இடத்தில் கஞ்சா செடி?… பின்னணியில் இருக்கும் நபர் யார்?… பல்கலைக்கழகத்தில் பேரதிர்ச்சி சம்பவம்…!

பிரபல உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக…

1 minute ago

“அய்யோ மரத்துல யாரு அது?”… தீயணைப்பு வீரர்கள் நிகழ்த்திய “ரியல் மேஜிக்”… புனேவில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்…!!

புனேவின் லட்சுமிநாராயண் சௌக் மற்றும் சங்கர் மகாராஜ் மடம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே, இளைஞர் ஒருவர் பொது இடத்தில் தற்கொலைக்கு…

6 minutes ago

அய்யய்யோ… தீடீரென நடுரோட்டில் வழிமறித்த வாகனங்கள்… மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய கொடூரம்… நெஞ்சை பதறவைத்த ஷாக்கிங் சம்பவம்…!

அதிகாலை நேரத்தில் சாலைகள் காலியாக இருப்பதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் எந்தவித அச்சமும் இன்றி அதிக வேகத்தில் வாகனங்களைச் செலுத்துகின்றனர். ஆனால்,…

9 minutes ago

கோமாவில் பிரசவம்…! ICU-வில் பிறந்த குழந்தை… கண் திறக்காமலே பிரிந்த தாய்… மனைவியின் உடலை ரோட்டில் வீசிய கணவன்…!!

தாவணகெரே தாலுகா, பெதுரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பசம்மா என்ற கர்ப்பிணிப் பெண், தனது கணவர் நிங்கராஜின் கொடூர…

16 minutes ago

“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்…” டெலிகிராமில் பயிற்சி பெற்று காய்கறி வியாபாரி செய்த காரியம்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவைப் பார்த்து, வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சிட்டுப் புழக்கத்தில் விட்ட காய்கறி…

21 minutes ago