ஹைதராபாத்தில் உள்ள பலக்னுமா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தன் வீட்டிற்குள் அமர்ந்திருந்த முகமது ஜியாவுதீன் என்பவரை அவரது உறவினர் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் போது தன் கழுத்தை நோக்கி வந்த கத்தியைத் தடுக்க முயன்றதில், ஜியாவுதீனின் இரண்டு கைகளிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தன் உறவினர் தன்னைக் கொலை செய்யவே முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான ஜியாவுதீன் உடனடியாக உஸ்மானியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவரது இரு கைகளிலும் கத்தி காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ள அவர், காவல் துறையினரிடம் இது தொடர்பான வாக்குமூலத்தையும் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அதை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்கான பின்னணி, காரணம் மற்றும் குற்றவாளியின் அடையாளம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பலக்னுமா போலிசார் வழக்கின் சட்டப் பிரிவுகளை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…