ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கின் ஹாக்னி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனர் சுராஜ் சப்னா என்ற 23 வயது பெண்ணை காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அதையும் மீறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இதனால் வரையில் இவர்கள் தங்களுடைய சொந்த கிராமத்தை விட்டு விலகி வேறு ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் மீண்டும் தங்களுடைய கிராமத்திற்கு திரும்பி உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு சப்னாவின் சகோதரர் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் தம்பதியின் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள்.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய நேரத்தில் சூரஜ் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பிள்ளார். அங்கிருந்து தப்பிய கும்பல் அன்றைய இரவே சூரஜையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவரை வழிமறிக்க தயாராகி வருவதாகவும் கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று அங்கு வந்த குற்றவாளிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய தாக்குதலில் நான்கு குற்றவாளிகளும் காயம் அடைந்தனர். பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…