தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதால் ஸ்டாலினுக்கு அது பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதும் இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட இருப்பதாகவும் சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நேற்று திமுக உடனான கூட்டணியை ராகுல் காந்தி உறுதி செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைமை குழு அமைத்துள்ளது. க்ரிஷ் ஜோடங்கர், செல்வப் பெருந்தொகை, சுரேஷ் ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது 2026 இல் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…